தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (126)

இளஸ்... மனஸ்... (126)

இளஸ்... மனஸ்... (126)


PUBLISHED ON : ஆக 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு அக்கா ஜெனிபருக்கு, அன்பு தங்கை எழுதிக் கொண்டது. என்னோட பிரச்னையை கேட்டு சிரிக்காதீங்க... தயவுசெய்து பதில் சொல்லாமல், இந்த கடிதத்தைத் தூக்கி போட்டுடாதீங்க... உங்களால் தான், எனக்கு உதவி செய்ய முடியும். ப்ளீஸ் அக்கா...

எனக்கு ஒரே மகள்; நான்காவது படிக்கிறாள்; கண் குறைபாடு காரணமாக, கண்ணாடி போட்டுள்ளாள். அதுவே, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே, மருத்துவர் நிறைய மீன் உணவு கொடுக்க சொல்றாங்க.

என் மாமியார் இருந்தவரை அவர்களே, மார்க்கெட் போய், 'பிரஷ்ஷா' வாங்கி வந்துடுவாங்க... இப்போ எனக்கு நல்ல மீன்கள் வாங்குவது எப்படின்னு தெரியல... எந்த மீனை வாங்குவது, எது, 'பிரஷ்' மீன் என்று ஒண்ணும் புரியல...

எங்க வீட்ல சைவம்; அப்படியே வளர்ந்துட்டேன். மாமியார் வீட்ல எல்லாரும் அசைவ பிரியர்கள்; 'மகளுக்கு நல்ல மீன் வாங்கி சமைத்து, அவளோட ஆரோக்யத்த பாரு'ன்னு கணவர் சொல்றார்... அசைவம் செய்ய கத்துகிட்டேன். ஆனா, நான் மட்டும் சாப்பிட மாட்டேன். இப்போ, மகளுக்கு மீன் சமைத்து கொடுக்க, நிறைய சமையல் குறிப்புகள் தெரிந்து வைத்துள்ளேன்; மாமியாரும் கற்றுக் கொடுத்திருக்காங்க. இனி, மகளுக்காக நானும் மீன் சாப்பிட முடிவு செய்துள்ளேன்.

ப்ளீஸ்... கொஞ்சம் உதவி பண்ணுங்க... என் மகளோட ஆரோக்கியத்தை நெனச்சாவது, இந்த கடிதத்திற்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும். சரியா...

ஹா....ஹா... வணக்கம் தங்கச்சி... இப்படி ஒரு பிரச்னையை நான் எதிர்பார்க்கல... என்னை பார்த்தா உனக்கு, 'மீனம்மா' மாதிரியா தெரியுது. ம்... அக்காவ நம்பி வந்துட்ட... கைவிட்டுட முடியுமா என்ன... களத்துல இறங்கிடுவோம்.

உன் மகளுக்காக, நீயும் மீன் சாப்பிடப் போவது நல்ல விஷயம் தான். மீன் என்றாலே சற்று நாற்றம் தான்; அதிலும், அதிக நாற்றம் வரும், மத்தி, சுறா மீன்களை இப்போதைக்கு ஓரம் கட்டிடு.

முள் வாலை, கட்லா, காரப்பொடி, மத்தி, கொடுவா, சங்கரா மீன்களில் முள்ளு அதிகம் இருக்கும்; ஆனால் முள்ளு மீன்கள் தான் மிகவும் சுவையாக இருக்கும். விரால், விலாங்கு, வஞ்சிரம், சீலா, திருக்கை, வவ்வால், சுதும்பு, கெளுத்தி, கோலா, நெத்திலி மீன்களில் முள்ளு குறைவாக இருக்கும்.

எல்லா வகை மீன்களிலும், நம் சருமத்திற்கு தேவையான ஒமேகா - 3 இருக்கும். தொடர்ந்து, மீன் சாப்பிட்டு வந்தால், உன்னோட தோல், 'பள... பள...'ன்னு, இளமை பொலிவுடன் இருக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் உணவு சாப்பிடுவது நல்லது.

பெரிய மீன்களை விட, குட்டி மீன்கள் ரொம்ப சுவையாக இருக்கும். கண் பார்வைக்கு மீன் உணவு மிக மிக நல்லது. குழந்தை பருவத்தில் இருந்தே மீனை, உன் மகளுக்கு கொடுத்து வந்திருந்தால், இவ்வளவு சீக்கிரத்தில் கண்பார்வை குறைபாடு கூட ஏற்பட்டிருக்காது.

சரி... இப்போ எப்படி வாங்குவதுன்னு சொல்லித்தர்றேன்.

ஒரு மீனை எடுத்து பார்க்கும் போது, அதன் செதில்கள், 'பள... பள...'ன்னு இருக்கணும்; உடம்பில், எந்த புள்ளிகளோ, வடுக்களோ இருக்கக் கூடாது. அப்பறம், அதோட கண்களும், 'பள... பள...'ன்னு வெளில துருத்திகிட்டு இருந்துச்சுன்னா, அது, 'பிரஷ்' மீன்னு தெரிச்சிக்கோ. உடனே, இவற்றின் செதில்கள், வால், செவுல் பகுதியை நல்லா, 'செக்' பண்ணிடு. அங்கே சில பூச்சிகள் உயிர் வாழும். எனவே, வாங்கும் போதும், சுத்தம் செய்யும் போதும் கவனம் தேவை.

அப்படியே செவுல் பகுதிய தூக்கி பார்த்தா, சிவப்பாக இருக்கணும்; பழுப்பு நிறத்தில் இருந்தால் வாங்காதே; பழைய மீன்னு அர்த்தம்.

மீனின் உடல், 'கொழ... கொழ...' வென்று இருந்தாலும் வாங்காதே; மீன் கெட்டியா இருக்கணும். வயிற்றுப் பகுதி வீங்கி இருந்தால் வாங்கக் கூடாது; அப்புறம் அழுகிய முட்டை நாற்றம் வந்தால், அது கெட்டு போன மீன்னு அர்த்தம். ஐஸ்சில் வைக்கப்பட்ட மீனின் உடல் பகுதி, உடைந்து, பழுப்பு நிறத்தில் இருந்தாலும் வாங்கக் கூடாது. போதுமா தங்கச்சி விவரம்!

ஒரு, 'டிப்ஸ்' தர்றேன்... தெருவில் வரும் மீன் வியாபாரிகளிடம் வாங்குவது நல்லது. ரெகுலரா சொல்லி வச்சிட்டா, கொண்டு வந்து தருவாங்க... இவங்க எப்போதும், 'பிரஷ்ஷா' எடுத்துட்டு வருவாங்க...

முடிந்த வரையில், குழம்பில் போட்ட மீன்களையே, மகளுக்கு கொடுத்து பழக்கு. அதில், முழு சத்தும் இருக்கும். மீன் வறுவலை தவிர்ப்பது நல்லது; வறுத்த மீன் சாப்பிட்டு பழகிட்டா, குழம்பு மீனை விரும்ப மாட்டாங்க. சரியா! இனி எல்லாரும், என்னை, 'மீ(ன்)னாக்கா'ன்னு கூப்பிடாம இருந்தா சரிதான்...

அருமையா சமைத்து, நீயும் மகளும் மட்டும் சாப்பிட்டா எப்படி... அக்காவுக்கும், 'பார்சல்' அனுப்ப மறக்காதே...

- ஜொள்ளுடன்,

ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us