PUBLISHED ON : ஆக 17, 2018

அ நிறம் | அளவு
ஆஸ்திரேலியாவில் வசிக்கும், என், 8 வயது பேரன், வீட்டில் ஆங்கிலம் பேசுவதால், தாய்மொழி மறந்து விடக் கூடாது என்பதற்காக தமிழுக்கு டியூஷன் செல்கிறான். சமீபத்தில், நான் ஆஸ்திரேலியா சென்ற போது, சிறுவர்மலர் இதழ்கள் சிலவற்றை, பரிசாக அளித்தேன்.
சமூக வலைதளத்தில் படிக்க வசதி இருந்தாலும், நேரடியாக படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதானே. என் மகளுக்கு சிறுவயதில் சிறுவர்மலர் இதழை அறிமுகப்படுத்திய, அந்த காலநினைவுகள் மனதில் மலர்ந்தது. தலைமுறை தாண்டி தொடரும் பந்தம் இது, அன்றும், இன்று வீ டூ லவ் சிறுவர்மலர்!
- கே.காமேஷ்வரி, மதுரை.
