தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (127)

இளஸ்... மனஸ்... (127)

இளஸ்... மனஸ்... (127)


PUBLISHED ON : ஆக 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு,

பயோ - மேக்ஸ் படிக்கும் பிளஸ் 2 மாணவன் எழுதிக் கொண்டது. இந்தப் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்; மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க ஆன்டி.

என் பெற்றோர், நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆனால், எனக்கு, 'ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங்' படிச்சு, இஸ்ரோ, நாசாவில் பணிபுரிய ஆசை.

'ஏரோ நாடிகல் படிச்சா, வேலை கிடைக்குமான்னு தெரியாது; நாசாவில் வேலை கிடைப்பது, அங்கு பணிபுரிவது என்பது மிக மிக கடினம்...' என்று சொல்கின்றனர் பெற்றோர். நான் சுமாராகத் தான் படிப்பேன் ஆன்டி. நாசாவில் வேலை கிடைக்கணும் என்றால், எவ்வளவு மதிப்பெண் வாங்கணும், எந்த கல்லூரியில் சேரணும்; என் கனவு நிறைவேற அதற்கான வழிகளைச் சொல்லுங்க ஆன்டி...

எங்கள் பள்ளியில், 'NEET' மற்றும் 'JEE' தேர்வுக்கான, 'கோச்சிங்' வகுப்புகள் ஆரம்பித்து விட்டனர். என் நண்பர்கள் எல்லாம் சேர்ந்துட்டாங்க... நான் மட்டும் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறேன். உங்க பதிலில் தான், என் முடிவு இருக்கிறது ஆன்டி. பதில் சொல்லுங்க ப்ளீஸ்...

ஹாய்டா செல்லம்... ஆன்டி என்ன சொன்னாலும் கேட்டுக்குவியா... குட்!

மகனே... 'ஏரோ நாடிகல்' படிக்கணும்னா, சென்னையில் உள்ள, MIT தான் பெஸ்ட். ஆனால், பயங்கர போட்டி இருக்கும், 'கட் ஆப் மார்க்'கே, 199 வைத்திருந்தால் தான் கிடைக்கும். மற்ற தனியார் கல்லுாரிகள் அநேகம் உள்ளது. அவற்றில் சேர, 55 சதவீதம் மதிப்பெண் இருந்தாலே போதும்; ஆனால், நிறைய பணம் கொடுத்து தான் சேரணும்.

அங்கு படிப்பதால் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று சொல்ல முடியாது. ஆனால், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, 'IIST' யில் சேர்ந்து படித்தாலே, உன்னை நாசாவில் கட்டாயம் சேர்ந்துக் கொள்வர்.

இதற்கும் கடும் போட்டி உண்டு; நாடு முழுவதும் உள்ள மிகச் சிறந்த மாணவர்கள் தான் இங்கு படிப்பர்; நாசா, இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்றால் அதிபுத்திசாலியா இருக்கணும் மகனே... ரொம்ப கடினமான படிப்பு; உழைப்பு வேணும். பயங்கர போட்டி இருக்கும். நம் நாட்டில், ஏரோ நாட்டிகல் படிப்பிற்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடையாது; மிஞ்சி மிஞ்சி போனால், ஏர்போர்ட்டில், 'மெயின்டெனன்ஸ் டிப்பார்ட்மென்டில்' தான் வேலை கிடைக்கும்; அவ்ளோதான்!

எனவே, பெற்றோர் சொல்வது போல், மருத்துவம் படித்து, நம் நாட்டிற்கு சேவை செய். தாமதிக்காமல், 'நீட் கோச்சிங்' வகுப்பில் சேர்ந்து, உன் பெற்றோர் கனவை நனவாக்கு... ஓ.கே., மிகச் சிறந்த மருத்துவராக, நீ வர வேண்டும் என வாழ்த்துகிறேன். அப்போ... ஆன்டிக்கு, நல்ல, 'ட்ரீட்மென்ட்' கொடுப்பாய் தானே!

ஹா... ஹா...

ஜெனிபர் பிரேம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us