தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்.. மனஸ்... ! (41)

இளஸ்.. மனஸ்... ! (41)

இளஸ்.. மனஸ்... ! (41)


PUBLISHED ON : ஏப் 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவலைகளை தீர்க்கும் சகோதரி பிளாரன்சுக்கு...

மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தை நான். இரண்டாவது மகளுக்கு வயது, 15; ஒன்றரை வயதான போது, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டாள்; தொடர்ந்து பேச்சு நின்று விட்டது.

அதிக சத்தத்தைக் கேட்டால் பிடிக்காது; கூட்டமான இடங்களுக்கு வர மாட்டாள். பேருந்தில் பயணம் செய்ய மாட்டாள். சிரிப்பதும், அழுவதும் திடீர் திடீரென நடக்கும்; அவ்வப்போது காதுகளை பொத்திக் கொள்வாள்.

'டிவி' மற்றும் அலைபேசியில் பாடல் கேட்பாள்; வீட்டிலுள்ள சில பொருட்களை கவனிப்பாள்; அவை இடம் மாறினால் சரியாக வைப்பாள். தேக்கரண்டியால் உணவு உண்பாள்; யாருடனும் ஒன்றி இருக்க மாட்டாள்.

மருத்துவரிடம் காட்டிய போது, 'ஒரு வகையான ஆட்டிசம்; குணப்படுத்துவது மிகவும் கடினம்...' என கூறி விட்டார்.

குடும்ப உறுப்பினர் தவிர, யாரையும் அவளுக்கு அடையாளம் தெரியாது; தனிமையில் இருக்க மாட்டாள். எப்போதும் உதவியாக ஒருவர் இருந்தாக வேண்டும். இதனால், மாபெரும் மன உளைச்சலாக உள்ளது. எதுவுமே தெரியாதவளை, தனியாக விடவும் பயமாக இருக்கிறது.

உடல் நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது; மாத்திரைகள் மூலம் தான் சரி செய்து வருகிறோம். இப்போது என் மனைவியும், மாமியாரும் பார்த்துக் கொள்கின்றனர். எதிர் காலத்தை எண்ணி, மிக துயரத்தில் இருக்கிறோம்.

மகளின் பிரச்னையை சரி செய்ய, நல் ஆலோசனை தந்து உதவ வேண்டுகிறேன்.

அன்பு சகோதரரே...

உலகில் ஏராளமான குழந்தைகளுக்கு, 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி பாதிப்பு உள்ளது. உலகளவில், 17 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இது, மூளை வளர்ச்சியை பாதிக்க கூடிய, நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு. மரபு சார்ந்த பிரச்னை, சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக இது ஏற்படலாம்.

ஒருவரின் பேச்சு, அறிவு, செயல்பாடு போன்றவற்றில் பாதிப்பாக வெளிப்படும்; குழந்தைக்கு குழந்தை இதன் அறிகுறி வேறுபடும்.

உங்கள் பெண்ணை பொறுத்தவரை, ஆட்டிசம் சவாலை சமாளிக்கும் திறன் நிறையவே உள்ளதாக தெரிகிறது.

ஆட்டிசத்தைக் குணப்படுத்தும் சிகிச்சை முறை எதுவும் இல்லை. இது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோரின் அரவணைப்பு மிக அவசியம்; அவ்வப்போது குழந்தை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குள், தனித்திறமையும், ஆற்றலும் இருக்கும்; அவற்றை கண்டுபிடித்து, மெருகேற்ற வேண்டியது பெற்றோரின் பொறுப்பு!

எனக்கு தெரிந்த நண்பரின் குழந்தைக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நண்பரின் தாய், நல்ல பாடகி; அவளின் ஆண் குழந்தைக்கும், இயல்பிலேயே இசையில் நாட்டம் இருந்தது. இதை புரிந்து, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, பாட்டு கற்பிக்க ஏற்பாடு செய்தார்; அதில் பல சிரமங்கள் ஏற்பட்டன.

குழந்தையும் விடாப்பிடியாக பாட கற்றுக் கொண்டது; இன்று, குறைபாடே தெரியாத வகையில், ஏழு மொழிகளில் பாடி அசத்துகிறான் அந்த இளைஞன்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை; மனதை தளர விட வேண்டாம்; உங்கள் முயற்சியும், சிறுமியின் அதீத ஆற்றலும் இணைந்தால், எந்த தடைகளையும் தாண்டலாம்.

- வாழ்த்துகளுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us