PUBLISHED ON : ஏப் 11, 2020

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்தவர் அலெசாண்டிரோ டி பெனிடெட்டோ. மிகச் சிறிய, 21 அடி நீளமுள்ள படகில், 268 நாட்கள் பயணம் செய்து, உலகை வலம் வந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் புவியின் தோற்றம், அமைப்பு, மாற்றம் குறித்து ஆய்வு செய்து வரும் அறிவியல் அறிஞர்.
ஏற்கனவே, ராபின் என்பவர், 32 அடி நீள படகில், இவரை விட, 45 மணி நேரம் கூடுதலாக எடுத்து, 1969ல் உலகை சுற்றி வந்து சாதனை புரிந்திருந்தார். அது முறியடிக்கப்பட்டுள்ளது.
