தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்.! (60)

இளஸ்... மனஸ்.! (60)

இளஸ்... மனஸ்.! (60)


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

இல்லத்தரசியாக இருக்கிறேன். கணவர் நட்சத்திர ஹோட்டலில் சமையல் கலைஞராக பணிபுரிகிறார். இரண்டு குழந்தைகள்.

மூத்தவன், 10ம் வகுப்பு படிக்கிறான். சரியான சாப்பாட்டு ராமன். அசைவம் கொடுக்காவிட்டால் அவதிப்படுத்துவான். அதிலும், வெரைட்டியாக வேண்டும். அவித்த முட்டை பிடிக்காது; அதை, ஆம்லேட், ஹாப்பாயில், முட்டை புரோட்டா, முட்டை கேக் என, வகை வகையாக செய்து கொடுக்க வேண்டும்.

கொஞ்ச நாட்களாக அவன் உணவு ரசனை வேறுமாதிரி மாறியிருக்கிறது.

'முயல்கறி கிடைக்குமா...'

'ஒட்டகக்கறி டேஸ்ட் பண்ண ஆசையா இருக்கு-...'-

இவ்வாறு, பல மிருகங்களின் பெயர்களை அடிக்கடி சொல்கிறான். வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ள உரியினங்கள் குறித்தும் கேட்கிறான்.

'சாகிறதுக்குள்ள உலகத்திலுள்ள எல்லா பறப்பன, நீந்துவன, ஊர்வன ஓடுவனவற்றின் கறிகளையும் தின்னுபாத்திடணும்...' என்கிறான். அவன் மாமிச பைத்தியத்தை போக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லவும். உனக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும்.

மாமிச உணவுக்கு அலையும் மகனால் கவலையில் வாடும் அம்மா, ஒரு முறை, சைவ உணவு சாப்பிடும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, 'அசைவத்தில் வெரைட்டி அதிகம்; சைவத்தில் வெரைட்டியே இல்லையே...' என்றேன்.

அவர், 'சைவத்தில் சுவையான, 1000 வெரைட்டிகள் உள்ளன. எல்லா நிலையிலும் ருசித்து, ரசித்து, குற்ற உணர்வின்றி சாப்பிடுகிறோம்...' என்றார்.

ஆட்டுக்கறி 100 கிராமில்...

கொழுப்பு: 75 மி.கி.,

சோடியம்: 86 மி.கி.,

பொட்டாஷியம்: 405 மி.கி.,

புரதம்: 27 கிராம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

ஒட்டகக் கறியில், புரதம், 20 சதவீதமும், கொழுப்பு, 11 சதவீதமும் உள்ளன.

மீனில், கொழுப்பு குறைவு. புரதச்சத்து அதிகம். ஒமேகா - 3, விட்டமின் - டி,

கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீஷியம் சத்துக்களும் உள்ளன.

காய்கறி 100 கிராமில்...

சோடியம்: 35 மி.கி.,

பொட்டாஷியம்: 169 மி.கி.,

நார்சத்து: 4.4 கிராம்

சர்க்கரை: 3.1 கிராம்

புரதம்: 2.9 கிராம் என்ற அளவில் உள்ளன. கொழுப்பு சத்து அறவே இல்லை.

உலகில் எல்லா மாமிசங்களும், ஒரே மாதிரி ருசி கொண்டவை தான். கடல் மீன் தான் சற்றே உப்பு கரிக்கும்.

மாமிசங்களை, ருசி மிக்கவையாக மாற்றுவது பலவகை மசாலாக்கள் தான். ஆட்டுக்கறிக்கு தனி மசாலா உள்ளது. பலவகையாக சமைக்க, தனித்தனி மசாலாக்கள் உண்டு.

கோழிக்கறிக்கு தனி மசாலா; மீன் சமைக்க தனி மசாலா.

ஒரே மசாலாவைக் கொண்டு, மட்டன், சிக்கன், மீன் சமைத்தால், சுவை ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில், மாமிசத்தை மசாலா இன்றி சமைத்து சாப்பிடுகின்றனர்; ஜப்பானியர்கள், மீனை பச்சையாகவும் சாப்பிடுகின்றனர்.

கடலை ஒட்டி வசிப்போர் அதிகம் மீன் சாப்பிடுவர்; பாலைவனத்தில் வசிக்கும் மக்கள், ஒட்டகக்கறி சாப்பிடுவர்.

மான் வேட்டையும், மான்கறி சாப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றம். இந்த மாமிசம் சாப்பிட்ட, பாலிவுட் நடிகர் ஒருவர் சிறையில் தள்ளப்பட்டதை மகனிடம் எடுத்துக்கூறு.

மனித மாமிசம் சாப்பிட்ட சமூகமும் உலகில் இருந்தது. அதை காட்டுமிரண்டி சமூகம் என, வரலாறு சபிக்கிறது.

மகனுக்கு, சாப்பாட்டில் இருக்கும் காதலை படிப்புக்கு மடைமாற்ற முயற்சிக்கவும். சுவையாக, சைவ உணவுகளை சமைத்து பரிமாறலாம். ஒட்டகக் கறியை, 10 விசில் வைத்து, குக்கரில் சமைத்தாலும், சரியாக வேகாது என்ற உண்மையை மகனுக்கு எடுத்துச் சொல்லவும்.

'கடுமையாக உழைத்து முன்னேறி மரணத்திற்கு பின்னும் இவ்வுலகில், முத்திரை பதிப்போம் மகனே!' என அறிவுரைக்கவும்.

உயிர் வாழத்தான் உணவே தவிர, உண்பதற்காக உயிர் வாழக்கூடாது என்பதை உணர்த்தவும்.

- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us