தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலோ ஜெனி ஆன்டி, என் பெயர்...------------ +1 படிக்கும் மாணவி. நீங்கள் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரைகளை, தவறாமல் படித்து வருகிறேன். என்னுடைய பிரச்னைக்கும் தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.

நான், 10ம் வகுப்பில், 395 மதிப்பெண் பெற்றேன். என் பெற்றோரும், உறவினர்களும், +1ல், 'ஆர்ட்ஸ் குரூப்' எடுக்க கூறினர். ஆனால் நான், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' எடுத்து படித்து வருகிறேன்.

கணிதம் மிகவும் கடினமாக உள்ளதால், மதிப்பெண் குறைவாகவே எடுக்கிறேன். இதனால், எனக்கு மிகவும் பயமாக உள்ளது. பெரியவர் பேச்சை கேட்காமல் நான் எடுத்த, 'கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்' சரி தானா... எனக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதா...

எல்லாரும் என்னை ரொம்ப, மட்டம் தட்டுறாங்க... இந்த குரூப் பற்றி நீங்கள் சொல்வதை வைத்து தான் என்னை, மட்டம் தட்டுபவர்களின் வாயை அடைக்க முடியும். பதில் சொல்லுங்க ஆன்டி...

மகளே... நீ எடுத்திருக்கும், 'குரூப்' மிக மிக அருமையான, 'குரூப்' தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மற்றவர் வாயை அடைப்பதெல்லாம், நீ படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பதில் தான் இருக்கிறது. 'கணிதம் கஷ்டமாக இருக்கிறது. அதில், குறைந்த மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளேன்' என்கிறாய். டியூஷன் சென்று, கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் தான், அண்ணா பல்கலைக் கழகம் போன்ற கல்லூரியில், பி.இ., அல்லது பி.டெக்., சேர முடியும். அங்கு நடைபெறும், 'கேம்பஸ் இன்டர்வியூ' வில் தேர்வானால், படிப்பு முடித்து வெளியே வரும்போதே நல்ல வேலை உன் கையில் இருக்கும்.

இல்லையென்றால், பி.இ.,க்கு பின் ஜாப் பேர், வாக்கின் இன்டர்வியூ போன்றவற்றில் தேடி தேடி அலைந்து திரிந்து தான் வேலை பெற முடியும்.

இல்லை... மேற்கொண்டு படிக்க தான் விருப்பம் என்றால், எம்.இ., அல்லது எம்.டெக்., சேரலாம். 'GATE' மற்றும் 'TANCET' தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், நல்ல கல்லூரி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின், உதவி பேராசிரியர் ஆகலாம்.

இன்ஜினியரிங் படிக்க விருப்பம் இல்லையெனில், இளங்கலை அறிவியல் பிரிவில், ஏதேனும் ஒரு, 'குரூப்' எடுத்து படித்து, பி.எட்., முடித்து ஆசிரியராகலாம். மேலும், அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதி, தேர்வாகிவிட்டால், அரசு பணியிலும் சேரலாம். வங்கி தேர்வு, குடிமைப்பணிக்கான தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்றவற்றிற்கு, ஏதாவது ஒரு பட்டம் இருந்தால் போதும்.

எப்படியிருந்தாலும், +2 வில், நல்ல மதிப்பெண் பெற்றால், உன் எதிர்காலம் மிக மிக சிறப்பாக இருக்கும். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நீ எந்த துறையில் ஜெயிக்கனும்னு ஆசைப்படுறியோ, அந்த துறையை இப்போதே முடிவு செய்துவிடு மகளே...

நீ தேர்ந்தெடுத்திருப்பது மிக மிக, நல்ல, 'குரூப்' என்பதை உன்னை இழிவு படுத்துபவர்களிடம் சொல்லிவிடு. இதையே ஒரு உந்து சக்தியாக வைத்து, நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதித்துகாட்டு!

அன்பு ஆன்டி,

ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us