தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (54)

இளஸ்... மனஸ்... (54)

இளஸ்... மனஸ்... (54)


PUBLISHED ON : ஏப் 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலோ ஜெனி ஆன்டி...---- நான் +1 மாணவி. நீங்கள், மற்றவர்களுக்கு கூறும் அறிவுரைகளை, தவறாமல் படித்து வருகிறேன். என்னுடைய பிரச்னைக்கும் தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.

எனக்கு முகத்தில் மீசை அதிகமாக இருக்கு. அதோடு மட்டுமல்ல, என் நுனி மூக்கின் மேல் கரும்புள்ளிகள் மிக அதிகமா இருக்கு. 'மீச வச்ச பொம்பள' என்று என்னை கேலி செய்கின்றனர்.

ஆனால், என் தோழியர் எல்லாம், என்னை மிகவும் கேலி செய்வது, எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. எல்லாரும் சொல்வதை, செய்து பார்த்து விட்டேன். ஆனாலும், என் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால், வெளி இடங்களுக்கு என்னால் செல்ல முடியவில்லை.

எல்லாரும் வித்தியாசமாக பார்க்கின்றனர். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு. தயவு செய்து, என் முகத்தில் இருக்கும் மீசையும், மூக்கில் இருக்கும் கரும் புள்ளியும் போகணும். இதுக்கு நீங்க தான் வழி சொல்லணும். தயவு செய்து என்னை காப்பாத்துங்க ஆன்டி!

அன்பு மகளே! உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இந்த வளர் இளம் பருவத்தில், ஒரு பெண்ணுக்கு, அழகு எவ்வளவு முக்கியம் என்பது, எனக்கு தெரியும்.

ஹார்மோன் சுரப்பிகளால், ஒரு சிலருக்கு முகத்தில் இப்படி முடி வளர்கிறது. அதற்குத்தான் அந்த காலத்துப் பெண்கள், முகத்தில் மஞ்சள் பூசி குளித்தனர். இன்று, அந்த பழக்கமே இல்லாமல் போய் விட்டது.

தினமும் பச்சை பயிரில் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து, அரைத்து வைத்துக் கொள். சோப்பிற்கு பதிலாக, இதையே பூசு. தினமும் இப்படி பூசி வந்தாலே, முகம் மாசு மருவின்றி பொலிவு பெறும்.

அத்துடன், உனக்கு மூக்கில் கரும்புள்ளி கள் இருப்பதால், நல்ல, 'பார்லர்' சென்று, 'பேஷியல்' செய்து கொள். அவர்களே, இந்த கரும்புள்ளிகளை எடுத்து விடுவர். இன்னொன்று கூட நீ செய்யலாம். கடைகளில், 'பிளாக்கெட்ஸ் ரிமூவர்' என்று கேள். பிளாஸ்த்திரி போல் இருக்கும். அதை மூக்கின் மீது போட்டு எடுத்துவிட்டாலே, இந்த கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.

முக்கியமாக, முகத்தில் உள்ள மீசை முடியை அகற்ற, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு கலக்கி மீசை உள்ள இடத்தில் கீழிருந்து மேலாக தடவி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, பின், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவு. இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியை தவிர்க்கலாம்.

* குப்பைமேனி இலை சிறிது, வேப்பிலை சிறிது, மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து, முடி உள்ள இடத்தில் பூசி, பின் முகத்தை கழுவி வந்தாலும் நாளடைவில் முடி வராமல் தடுக்கலாம்.

* சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து முடி இருக்கும் இடத்தில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, காய்ந்த பின் கழுவினால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த, 'ஸ்கரப்'பை வாரத்திற்கு மூன்று முறை செய்து வா. நாளடைவில் முடிகள் உதிர்ந்து, முகம் அழகு பெறும்.

கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, மேலே கூறிய வழிகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வா. சோர்ந்து போகக்கூடாது; பாதியிலேயே விட்டு விடக் கூடாது. உன்னுடைய குறிக்கோளை அடையும்வரை தொடர்ந்து செய்; உன் வேதனை நீங்கும். பொலிவான அழகு பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us