தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (199)

இளஸ் மனஸ்! (199)

இளஸ் மனஸ்! (199)


PUBLISHED ON : மே 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...



நான், 16 வயதான சிறுமி. தனியார் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். எனக்கு இப்போது வரும், 'டமால் டூமில்' படங்கள் பிடிக்கவில்லை. அதாவது, 1950ல் பார்த்து, ரசித்த தமிழ் படங்களை விரும்புகிறேன்.

சினிமா தியேட்டர்களில், இப்படங்களை மீண்டும் திரையிட வாய்ப்பில்லை. பழைய தமிழ் திரை காவியங்களைப் பார்த்து ரசிக்க, ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.



இப்படிக்கு,

ஆர்.சுபாஷினி


அன்பு செல்லமே...

பழைய தமிழ் படங்கள் மீது, உன் பாசம் கண்டு மகிழ்கிறேன். பழைய தமிழ் படங்களில், நல்ல கதை அம்சமும், அர்த்த பூர்வ பாடல்களும், அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளும், மக்களை நல்வழிப்படுத்தும், நீதி போதனைகளும் நிறைந்திருக்கும்.

வண்ண படங்களை விட, கறுப்பு வெள்ளை படங்களில், ஒளிப்பதிவு ஜெக ஜோதியாக இருக்கும். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஏ.பி.நாகராஜன், ஏ.சி.திருலோக சந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே.பாலசந்தர் போன்ற, அற்புதமான இயக்குனர்களும், கண்ணதாசன், வாலி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற சிறந்த கவிஞர்களும் நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, டனால் தங்கவேலு, சுருளிராஜன் போன்ற சிறந்த நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தன.

கீழ்க்கண்ட படங்களை, பெற்றோர் அனுமதியுடன், 'யுடியூப்' மீடியாவில் வாரம் ஒரு படமாய் பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்., படங்கள்!

ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், உலகம் சற்றும் வாலிபன், ஒளி விளக்கு, குலேபகாவலி, அடிமைப் பெண், குடியிருந்த கோவில்.

சிவாஜி படங்கள்!

பாலும் பழமும், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், பாவமன்னிப்பு, உத்தம புத்திரன், தெய்வமகன், நீதி, முதல் மரியாதை, திரிசூலம், திருவிளையாடல்.

ஜெமினி கணேசன் படங்கள்!

சாந்தி நிலையம், கற்பகம், பாசமலர், மிஸ்சியம்மா, கல்யாணப்பரிசு.

ரவிச்சந்திரன் படங்கள்!

காதலிக்க நேரமில்லை, குமரிப்பெண், மூன்றெழுத்து, நான், அதே கண்கள்.

ரஜினிகாந்த் படங்கள்!

முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, எஜமான், ஆறிலிருந்து அறுபது வரை, எந்திரன், படிக்காதவன், தளபதி, பாட்சா, அண்ணாமலை, படையப்பா.

கமல்ஹாசன் படங்கள்!

மூன்றாம் பிறை, அவ்வை சண்முகி, சகலகலா வல்லவன், அன்பே சிவம், ஹேராம், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், தேவர் மகன், மகாநதி, பதினாறு வயதினிலே.

இவற்றை பார்ப்பதால், புதிய அனுபவத்தை பெறும் வாய்ப்பு ஏற்படும்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us