PUBLISHED ON : மே 27, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 32; தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணிப்புரிகிறேன். வேலை சுமையால், என் மனமும், உடலும் சோர்வடையும் போது, சிறுவர்மலர் இதழைப் படிப்பேன். அது புத்துணர்ச்சியை வழங்கும்.
என் குழந்தைகளுக்கு தமிழ்மொழிப்பற்றை வளர்க்கிறது. தமிழை, பிழையின்றி படிக்கவும், எழுதவும் உதவுகிறது.
எங்கள் வீட்டுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதி வழியாக குழந்தை பட்டாளம் விருந்தாளியாக வருகிறது. அது மிகுந்த சந்தோஷம் தருகிறது; இதயத்தில் சாம்ராஜ்யமாகவும் மாறுகிறது.
அனைத்து அறிவியல் பூர்வமான தகவல்களையும் தந்து சிறியோர், பெரியோர் என அனைவர் இதயத்திலும் ஆட்சி புரிகிறது சிறுவர்மலர்.
- வி.வெங்கடேஷ், பெங்களூரு.
தொடர்புக்கு: 89717 04941
