தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நான் கருப்பு; நான் ஆரஞ்சு!

நான் கருப்பு; நான் ஆரஞ்சு!

நான் கருப்பு; நான் ஆரஞ்சு!


PUBLISHED ON : ஜூன் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பர். சாப்பிடும் உப்பின் மூலம், நன்மையும், தீமையும் உண்டு.

கடல் நீரில் இருந்து தயாராகும் கல் உப்பை உணவில் சேர்க்கலாம்; ஆனால், அதை சுத்திகரித்து, 'டேபிள் சால்ட்' என்ற பெயரில், வரும் உப்பில், பல வித, வேதிப் பொருட்கள் சேர்வதால், விஷமாகி விடுகிறது.

கருப்பு உப்பு:

இமயமலை மற்றும் நேபாளத்தில், கிடைக்கும். கருப்பு உப்பை, 'காலாநமக்' என்கின்றனர்.

வட மாநிலங்களில், அதிகம் உபயோகிக்கின்றனர்.

இதை பயன்படுத்துவதால், உடலில் கெட்ட கொழுப்பு குறைகிறது; அஜீரண கோளாறு நீங்குகிறது; நல்ல துாக்கத்தை தருகிறது. முடி வளர்ச்சி ஏற்படுகிறது; முடியில் வெடிப்புகள் நீங்கி, கருமை நிறமாகிறது.

கருப்பு உப்பில், காரத்தன்மை அதிகம். அதனால், வயிற்றில் ஏற்படும் அமிலத் தன்மையை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலை நீங்குகிறது.

கருப்பு உப்பை, மண் சட்டியில் வறுத்து, துணியில் கட்டி, ஒத்தடம் கொடுத்தால், மூட்டு வலி மறையும். தசைப் பிடிப்பு நீங்கும்.

'சைனஸ்' பிரச்னைக்கு, இந்த உப்பை பொடித்து, 'இன்ஹெலரில்' போட்டு சுவாசித்தால், மூச்சு பிரச்னை நீங்கும்.

இந்து உப்பு:

பாறைகளில் வெட்டி எடுக்கின்றனர். ஆரஞ்சு கலந்த வெள்ளை நிறத்தில், அழகாக இருக்கும். கடலில் கிடைக்கும் கல் உப்பு, உணவில் கரைந்து, சர்க்கரை சத்தாக மாறி விடும். ஆனால், இந்து உப்பு, கடைசி வரையில், காரத் தன்மையுடனே இருக்கும்.

இது, 'இமயத்தின் வெள்ளைத் தங்கம்...' என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இதில், 84 கனிமங்கள் அடங்கியுள்ளன.

இந்த உப்பை, உணவில் சேர்த்துக் கொள்வதால், ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்; தைராய்டு பிரச்னை நீங்கும்.

ஒரு, வாளியில், சிறிதளவு தண்ணீர் எடுத்து, இந்து உப்பை, ஒரு கைப்பிடி போட்டு, 10 நிமிடம், கால் பாதத்தை வைத்திருந்தால், பாத எரிச்சல், வலி நீங்கும்; வாதம், பித்தம், கபம் நீங்கும்.

எலுமிச்சை சாற்றில், இந்து உப்பு கலந்து, குடித்து வந்தால், உடல் சூடு தணியும்; மலச்சிக்கல் நீங்கும்.

அரிப்பு, தடிப்பு, எரிச்சல் இருந்தால், கடுகு எண்ணெயை சூடாக்கி, அதில் இந்து உப்பு கலந்து, உடலில் தேய்த்து, குளித்தால், சரும நோய்கள் நீங்கும்.

இந்து உப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வெதுவெதுப்பான வெந்நீரில், இந்து உப்பு கலந்து, வாய் கொப்பளித்து வர, பல் மற்றும் ஈறு வலி, வயிற்றுப் புண் குணமாகும்.

உப்புக்களை பயன்படுத்தி, நோய் நீங்கி, வாழ்வீர்; காதிகிராப்ட் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் இந்த வகை உப்புக்கள் கிடைக்கும்.

- வசந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us