PUBLISHED ON : செப் 12, 2014

வெட்டுக்கிளிகள்- அவைகளின் டிக்-டிக் சத்தத்திற்கும், காற்றில் உயர தாவுவதற்கும் அறியப் படுகின்றன. உலகினில் 20 ஆயிரம் மற்றும் அதற்கு மேலும் வெட்டுக்கிளி வகைகள் உள்ளன. தாவர இலைகள், தண்டுகளே இவைகளின் உணவு.
பொதுவாக, இவை தனிமை விரும்பிகளே. இவை, உருவில் பெரிதாகும், பளிச்சென்ற வண்ணம் பெரும், மில்லியன் கணக்கில் ஒன்று சேரும் போது' மாபெரும் பசியெடுத்த வெட்டுக்கிளிகளின் சூறாவளி!' எனலாம்.
ட்யூன் என்ன?
வெட்டுக்கிளிகள் திறமையான பிடில் இசை கலைஞர்கள். வயலினிலிருந்து புறப்படும் இசையை போன்றே இவை சத்தத்தை எழுப்பும். வெட்டுக் கிளியின் கால்கள்தான் வயலின் குச்சி. அவைகளின் சிறகு நாளங்கள்தான் வயலின் கம்பிகள். கிரிகெட் (சில்வண்டு) பூச்சியும் அதன் இசைக்கு பெயர் பெற்றவையே. இவை, தன் சிறகுகளை கொண்டு வந்து ஒலி எழுப்பும். ஒரு சிறகில் தடிமனான நாளம் புடைப்புகளான மேடுகளை கொண்டிருக்கும். அதை கரடு முரடான மற்றொரு சிறகின் மேல் தேய்க்க கிரிகெட் பூச்சி உடலிலிருந்து இசை எழும்பும்.
நான் வளர்கிறேனே மம்மி!
பெண் வெட்டுக்கிளிகள் மணலில் தங்கள் முட்டைகளை இடும். அதன் குட்டி பாப்பாக்கள் தாங்களே முட்டையை உடைத்து, மணலிலிருந்து மேலே வருகிறது. அவை அப்படி வரும்போது வெட்டுக்கிளியின் வடிவுடன் விளங்கும். வளர்ச்சி அடைந்த வெட்டுக் கிளிகள் உருவை அடைய குட்டி வெட்டுக் கிளிகள் 3 முதல் 5 முறை தங்கள் இறகு களை உதிர்க்கும்.
ஒவ்வொரு முறையும் இறகு உதிர்த்த பின் முன்பை விட பெரிதாக வளர்ந் திருக்கும். அவை, இறுதி முறையாக இறகை உதிர்க்கையில் அவை முழுமையாக வளர்ந்த இறகுகளை பெற்றிருக்கும்.
வெட்டுக்கிளிகளின் மாபெரும் படையெடுப்பு!
வெப்பமான -வறண்ட பகுதிகளில் பெரும் மழை பொழிய, அடர்ந்து செழித்து தாவரங்கள் வளர்கின்றன. அப்படி அங்கு உருவாகும் பெருமளவு தாவர உணவை உண்ண மற்றும் இனப் பெருக்கத்திற்காக எக்கச்சக்கமான வெட்டுக் கிளிகள் வருகின்றன. அப்படி அவை ஏராளமான உணவை உட்கொள்வதால் அவைகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகிறது. வளர்ச்சியுற, மேலும் பசி அதிகமாக அங்கே வளர்ந்துள்ள தாவரங்கள் எல்லாம் வெட்டுக்கிளிகளின் கோர பசிக்கு பலியாகி அழிகின்றன.
ஒண்ணுக்குள்ள ஒண்ணு!
கிரிகெட் பூச்சியும், வெட்டுக் கிளியின் பூச்சி வகையை சேர்ந்ததே. ஆனால், கிரிகெட்டிற்கு பெரிய ஆன்டனாவும், உணவாக பிற பூச்சிகளை உண்ணும் தன்மையும் உண்டு!
குடும்பத்தின் நீட்சி!
கீழேயுள்ள அனைத்து பூச்சிகளும் வெட்டுக்கிளிக்கு உறவினர் வகைகள்தான். ஆனால், அவற்றின் இயல்புகளும், தனித்துவமும் அலாதியானது.
