தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நெல்சன் மண்டேலா! (2)

நெல்சன் மண்டேலா! (2)

நெல்சன் மண்டேலா! (2)


PUBLISHED ON : செப் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படித்துக் கொண்டே இரவிலும் பகலிலும் வயல்களில் வேலை செய்து வந்தார் மண்டேலா. இரவு நேரங்களில் அவருடைய இனத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தீயை மூட்டி, அதை சூழ்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.

வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே தங்களது இனத்தவர் எப்படியெல்லாம் சந்தோஷமாக நாட்களைக் கடத்தி மேன்மை யான வாழ்க்கை வாழ்ந்தனர் என்று அவர்கள் கூறுவதைக் கேட்டார் மண்டேலா. நிகழ் காலத்தில் வெள்ளையர் தங்கள் இனத்தவருக்கு செய்து வரும் கொடுமைகளைக் கதை கதையாகக் கேட்டு வருந்தினார்.

துப்பாக்கியும், பீரங்கியும் ஏந்திய வெள்ளையரின் போர் வீரர்கள் புதிய போர்க்கருவிகள் ஏதுமில்லாத ஆப்பிரிக்கரை நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றனர். தங்களுடைய பழமையான வீடுகளிலிருந்து குடிபெயர்ந்து செல்ல மறுத்த ஒரே காரணத்துக்காக, கறுப்பர் இனத்தை சேர்ந்த தம்முடைய மக்களை வெள்ளையர் சித்ரவதை செய்வதை மண்டேலாவால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

தங்கள் இனத்தவரின் துயரத்தைத் துடைக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கருதினார் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவில் கடுமையான நிறக் கொடுமை எல்லாவற்றிலும் நீக்கமறத் தாண்டவமாடிக் கொண்டிருப்பதைக் கண்டு குமுறினார் மண்டேலா. கறுப்பரின் பள்ளிக் கூடங்கள் புறக்கணிக்கப்பட்டன. அதனால், ஒழுங்கான கல்வி முறை இல்லாமல் இருந்தது. ஆனால், வெள்ளையர்களுக்கான பள்ளிகளோ சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன.

மருத்துவமனைகளில் வேற்றுமை பாராட்டப்பட்டது. புதை குழியிலும், பிணங்கள் எரிக்கப்படும் இடங்களிலும் நிறவேற்றுமை வெறி தாண்டவமாடியது. மண்டேலா கெல்ட்டவுனின் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த காலத்தில், வைக்கோலைப் படுக்கை உறைக்குள் திணித்து படுக்கை தயாரித்துக் கொடுத்தனர்.

அதன் பின் ஜோகன்ஸ்பர்க்கில் தொடர்ந்த உயர் கல்வியின் போதும், வறுமையும், நிறவேற்றுமைக் கொடுமைகளும் அவரைத் துரத்தத்தான் செய்தன. ஜோகன்ஸ்பர்க்கில் வால்டர் சிசூலா என்பவர் நட்பு கிடைத்தது. மேலும், அவரது மாமன் மகளான ஈவிலின் மசே என்பவரை மண்டேலாவுக்கு சிசூலூ அறிமுகப்படுத்த அது காதலாக அரும்பியது.

பின் இருவரும் தம்பதியராய் மாறினர். அவர்களுக்கு முதலில் ஆண் குழந்தையும், பிறகு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. அடிப்படைத் தேவைகளே பற்றாக் குறையாக உள்ள குடும்ப சூழலில் வாழ்ந்தார் மண்டேலா. நிறவேற்றுமைக் கொடுமைகளும் அத்துடன் சேர்ந்து மண்டேலாவை வழக்கறிஞர் பட்டம் பெற தடை செய்தது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் அணியில் சேர்ந்து முக்கியப் பங்காற்றத் துவங்கினார் மண்டேலா. வெள்ளையர் ஆட்சிப் பொறுப்பேற்று கறுப்பினத்தவரை பல வகையிலும் பழிவாங்கத் துவங்கினர். இன வேறுபாட்டுப் பட்டியல்கள் குடும்பங்களைப் பிரித்தன. தங்களுடன் பெண்டிரை அழைத்து வராது வந்த வெள்ளையர் கறுப்பினப் பெண்டிரை மணந்து பெற்ற பிள்ளைகளும் நிறவேற்றுமைக் கொடுமைக்கு ஆளாகினர்.

ஒன்றுபட்ட குடும்பங்கள் புகுத்தப்பட்ட நிறவேற்றுமைப் பிரிவினைகளால் சிதைந்து சின்னா பின்னமாகின. தங்களின் வீட்டு வழியே நடந்தால் கறுப்பர்கள் சுட்டுக் கொல்லப் படுவர் என்ற எச்சரிக்கை விளம்பரப் பலகை வைத்தனர்; நிலங்களைப் பறித்தனர்; தொழில்களைத் தடை செய்தனர்; எதிர்த்தவர்களை எரித்தனர்.

நடன அரங்குகள், கடற்கரைகள், திரை அரங்குகள் யாவும் கறுப்பின மக்களுக்குத் தடை செய்யப்பட்டன. அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் ஏழை எளியோருக்காகவும், கறுப்பின மக்களின் அடிமை விலங்கு ஒடிக் கவும், நெல்சன் மண்டேலா தவறாமல் நீதி மன்றங்களுக்கு சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றிய மண்டேலா, 1951ல் இளைஞரணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிமன்றங்களில் வழக்கறிஞராக இருந்த போதிலும் கறுப்பினத்தவர் என்பதால் மண்டேலா போன்றோர் தாழ்வாக நடத்தப் பட்டனர். கறுப்புக்கும், வெள்ளைக்கும் எல்லையற்ற இடைவெளி வளர்ந்து கொண்டே இருந்தது.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us