தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பள்ளிக்கு போக பழக்குதல்!

*சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல கற்றுக் கொடுங்கள். பள்ளியில் தனது வேலைகளை சுயமாக செய்யவும், சக குழந்தைகளோடு எப்படி பழக வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.

* குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், விலாசம், பள்ளியின் பெயர் போன்ற அனைத்தையும் மனப்பாட மாக்குங்கள். பெற்றோரின் செல்போன் எண்ணையும் மனதில் பதிய வைத்து விடுங்கள்.

* 8 முதல் 10 மணி நேர தூக்கம் உங்கள் குழந்தைக்கு தேவைப்படும். அதனால், இரவு உணவை சீக்கிரமே கொடுத்து, தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க வையுங்கள். அதுபோல், காலையில் விழிக்கவும் சரியான நேரத்திற்கு பழகுங்கள்.

* கார்ட்டூன் பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ செய்தால் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அதை நிறுத்தி விடுங்கள். லேசான சுடுநீரில் உடலை கழுவி, இரவு உடை உடுத்தி, சுடுபால் ஒரு கப் கொடுத்து தூங்க வையுங்கள்.

* தனியாக உணவு சாப்பிடவும், சாப்பிடு வதற்கு முன்பும், பின்பும் கையை கழுவு வதற்கும் சொல்லிக் கொடுங்கள்.

* நகம் கடித்தல், கை சப்புதல் போன்ற ஏதாவது ஒரு பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அந்த பழக்கம் நல்லதல்ல என்பதை உணர்த்துங்கள். அது மற்ற குழந்தைகளின் கேலிக்கு உள்ளாகும் என்பதை எடுத்து சொல்லுங்கள்.

* இருமல் வரும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் வாயையும், மூக்கையும் மூடிக் கொள்ள வலியுறுத்துங்கள்.

* கை, கால்கள், நகம் போன்றவைகளை சுத்தமாக பேண கற்றுக் கொடுங்கள். பெண் குழந்தைகளுக்கு பேன் தொந்தரவு இருக்கும். முடியை நன்றாக பராமரித்து அந்த தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* பள்ளி லீவு நாட்களில் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது சருமத்தை பொலிவாக்கும். ஆரோக்கியத் திற்கு ஏற்றதாகும்.

* பள்ளிக் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது வியர்வையை உறிஞ்சும். காற்றோட்டமாகவும் இருக்கும்.

* மூன்று ஜோடி சீருடை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் அணிந்ததை வெயிலில் காய வைத்து மீண்டும் பயன் படுத்தக்கூடாது. ஒவ்வொரு முறையும் துவைத்ததையே பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடைகளுக்கு வீரியம் அதிகமுள்ள சோப்பை பயன்படுத்தக் கூடாது.

* காட்டன் சாக்ஸ் வாங்கி கொடுங்கள். அது விரல் இடுக்கில் வியர்வையால் தொற்று ஏற்படுவதை தடுக்கும். ஒவ்வொரு நாளும் துவைத்த சாக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும்.

* பள்ளியில் அனுமதிக்கும் பட்சத்தில் மழைக்காலத்தில் சாக்ஸ், ஷூ அணிவதை தவிர்க்கலாம். அதனுள் மழை நீர் சென்றால், குழந்தைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.

* பள்ளியின் அருகில் உள்ள கடைகளில் இருந்து உணவுப் பொருட்களோ, பானங் களோ, பழங்களோ வாங்கி சாப்பிடுவதை ஊக்குவிக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அவை தான் காரணமாக இருக்கின்றன.

* காலை உணவை, 'பிரைன் புட்' என்பார் கள். உடலுக்கும், மூளைக்கும் மிகவும் இன்றியமையாதது காலை உணவு. அதனால் சத்து நிறைந்த காலை உணவை காலையில் வழங்குங்கள். சாப்பிடாமல் பள்ளிக்கு அனுப்பும் பழக்கத்தை கைவிடுங்கள்.

*மிக்சர், சிப்ஸ், ஸ்வீட் வகைகளை குழந்தை களுக்கு கொறிப்பதற்கு கொடுப்பதை தவிர்த்திடுங்கள். அதற்கு பதில் வீட்டிலே அப்பம், கொழுக்கட்டை, ரவா லட்டு போன்றவைகளை தயார் செய்து கொடுத்து அனுப்புங்கள். குளிர்பானங்களுக்கு பதில் நீங்களே தயார் செய்யும் சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை போன்ற ஜுஸ் வகை களை கொடுங்கள்.

*தவிடு நீக்காத அரிசியை வாங்கி, அதில் குழந்தைகளுக்கு சாதம் தயார் செய்து கொடுங்கள்.

* குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடு இருந்தால், நினைவாற்றல் குறைபாடு கொண்டவர்களாக இருப்பர். அதை நாம் உடனடியாக ஈடு செய்யாவிட்டால் குழந்தைகளின் சுபாவங்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால், இரும்பு சத்து நிறைந்த அவல், முட்டை மஞ்சள் கரு, ஈரல், முருங்கை இலை, கீரை வகைள், தவிடு, விதை வகைகள், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவைகளை குழந்தைகளின் உணவில் சேருங்கள்.

* குழந்தைகளோடு நெருக்கமாக பழகும் வாய்ப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். அக்கம்பக்கத்து குழந்தைகளை சேர்த்து, விளையாட்டு களை ஒருங்கிணைந்து நடத்தி, அவர் களோடு நட்புறவை பேண கற்றுக் கொடுங்கள்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us