PUBLISHED ON : செப் 14, 2018

கடந்த, 1992ல், பரமக்குடியிலுள்ள, காளிதாஸ் நடுநிலைப் பள்ளியில், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
எஸ்.என். அலமேலு ஆசிரியை, நன்றாக பாடம் நடத்துவார். வகுப்பிற்கு வந்தவுடன், எல்லா மாணவ, மாணவியரும், தலை சீவி, பொட்டு வைத்து, 'நீட்'டாக இருக்கின்றனரா என பார்வையிட்ட பின் தான், வகுப்பு எடுப்பார்.
தினமும், தலைக்கு எண்ணெய் தடவி, சீவாமல் பள்ளிக்குச் செல்வேன். எண்ணெய் வைப்பது எனக்கு பிடிக்காது; ஆகையால், ஆசிரியை சொன்னாலும், நான் கேட்பதில்லை; ஏதாவது சாக்கு சொல்வேன்.
ஒரு நாள், வகுப்பு எடுப்பதற்கு முன், எண்ணெயும், சீப்பும் எடுத்து வந்து, எல்லார் முன்னிலையில், எண்ணெய் வைத்து, சீவி விட்டார் ஆசிரியை; எனக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது.
அடுத்த நாள் முதல், தினமும் எண்ணெய் தடவி, தலை சீவி அழகாக செல்வேன். என் வயது தற்போது, 35; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்; தலைக்கு எண்ணெய் போடும் போதெல்லாம், அந்த ஆசிரியை, என் நினைவிற்கு வருவார்.
- ஜெ.ஆர்.நாகநாதன், பரமக்குடி.
