PUBLISHED ON : ஏப் 15, 2011

சூரியனோடு, தண்ணீரும் அமேசான் பகுதியின் இயற்கை செழிப்பை மேம் படுத்துகிறது. ஏனெனில் பெரிய நதிகள் அல்லது தேங்கிய குட்டை நீர் ஆகிய எல்லா தண்ணீர் அமைப்புகளும் தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. அமேசானில் காட்டு பகுதி இரண்டு வகை உள்ளது.ஒன்று 'வர்ஜீஸ்' இந்த பகுதி சமயங்களில் நதி வெள்ளத்தால் பாதிக்கப்படும். சில சமயம் வறண்டு காணப்படும். பிரிதொரு சமயமோ தண்ணீர் தாவரங்களுடன் காட்சியளிக்கும். மற்றொரு வகை 'இகாபோஸ்' இவை எப்போதுமே தண்ணீர் சார்ந்தே இருக்கும்.
தாவரங்களில், பூக்கும் தாவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய பங்காற்று கின்றன. இவை எல்லாவித சூழ்நிலைக்கும் தாக்கு பிடிக்கும் தன்மை கொண்டவை. இவை சில கால கட்டங்களில் மட்டுமே வெள்ள பெருக்கெடுக்கும் பகுதி மற்றும் கரையோர வண்டல் மண் பகுதி என எங்கும் வளரும். சில நேரம், இந்த வண்டல் மண் பகுதி பல வகை புல் வகைகளால் நிறைந்து இருக்கும். தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்ப, இந்த புற்களின் வாழும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. கிளைகள் இல்லாத மர வகைகளில் ஒன்றான 'மவுரிஜியா பிளக்ஸீஓசோ' கூட இதில் ஏராளமாய் வளரும்.
அமேசானின் அழகு!
ˆபரும்பாலான தாவரங்களால் தண்ணீருக்கு வெளியே வாழ முடியாது. 'அராஷியா தாவர குடும்பத்தைச் சேர்ந்த கயானாவின் 'மௌகோ- மௌகோ' தாவரம் மிக நெருக்கமாய் வளர்ந்து மண்ணின் வளம் தண்ணீரால் அடித்து செல்லப்படாமல் தடுக்கிறது.
தண்ணீரின் மேல் பாசியோ, நெருக்கமான கொடி தாவரங்களோ படிந்திருக்கும். இந்த தாவர வகைகள் சேர்ந்ததுதான் நம் 'ஹையாஸிந்த்'. இவைகளில் இலைகள் தண்ணீரில் மிதக்கும் வகையில் இயற்கையாகவே அமைந்து உள்ளன. இவைகளின் வேர்கள் தண்ணீரில் இருந்து தேவையான சத்துக்களை எடுத்து கொள்வதோடு, நங்கூரம் போல பூமியில் வெகு உறுதியாக பிடித்து இருக்கும்.
வெளிர் நீல வண்ணத்தில், இந்த 'ஹை யாஸிந்த்' தாவரத்தின் பூக்கள் மிக மிக அழகாக இருக்கும். இந்த பூக்களின் அழகிற்காக இவை பல கரையோர பகுதிகளுக்கு அலங்கார தாவரமாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காலி பண்ணினா பிரச்னைதான் பையா!
பக்கத்தில் படர்ந்திருப்பது தண்ணீரும், தாவரமும், பூவும் சேர்ந்த இயற்கை பொக்கிஷ காட்சி. இது அமேசான் காடுகளில் காணப்படும் 'தண்ணீர் ஹை யாஸிந்த்' தாவரம் தான் இது.
இது தண்ணீரின் மேல், மிக அடர்த்தியாய் படர்ந்திருக்கும். இதனை இந்த இடத்தில் இருந்து வேறு எங்காவது மனிதன் வளர்க்க எண்ணி அங்கே பயிரிட்டால் அவ்வளவுதான், இந்த தாவரத்தால் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னை அந்த பகுதியை சுற்றி அடிக்கும்.
ஒரு தாவரம் வளரும் இயற்கையான அமைப்பிலிருந்து மாற்றுவதால் ஏற்படுகின்ற பிரச்னையை எடுத்து காட்டுகிறது. இயற் கையில் இவை தொன்று தொட்டு வளரும் இடங்களில் இவைகளால் ஏற்படும் பிரச்னைகளை இயற்கையே கட்டுப்படுத்துகிறது.
