தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுத்தமானதா...?

சுத்தமானதா...?

சுத்தமானதா...?


PUBLISHED ON : மே 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக, நிலத்திலுள்ள நீரில் கரைந்த அயனிகள் அதிகம் உள்ளன. ஆனால், மழை நீர் இயற்கையிலேயே ஆவியாகி குளிர்ந்து வடிகட்டப்பட்ட நீராகவே கிடைக்கிறது. எனவே, மழைநீரில் மிகக் குறைந்த அளவே தனிமங்கள் உள்ளன. அதாவது ஒரு லிட்டருக்கு 10 முதல் 20 மி.கி., அளவே தனிமங்கள் உள்ளன. அயனிகளைப் பொறுத்தவரை லிட்டருக்கு 1 முதல் 3 மி.கி., அளவே உள்ளன.

மழைநீரின் PH அளவு 6.7 முதல் 7.2 வரை உள்ளது. எனவே, குடிப்பதற்கு ஏற்றவாறு உள்ளது. இருப்பினும் மழைநீரின் PH அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. கடற்கரைகளில் பெய்யும் மழைநீரில் கடல்நீர்த் திவலை அதிகம் கலக்கும் வாய்ப்பு உள்ளதால், அயனிகள் அதிகம் கரைந்துள்ளன.

தொழிற்சாலைகள் குறிப்பாக கார்பன்டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு, கந்தகடை ஆக்ஸைடு அதிகம் வெளியேறும் சூழ்நிலையில் மழைநீர் அதிக அமிலத் தன்மையுடன், PH அளவு குறைந்து காணப்படுகிறது. இது குடிப்பதற்கு ஏற்றதல்ல.

மழைநீரில் தனிமங்களும், அயனிகளும் குறைவாக இருப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் மனிதனுக்குத் தேவையான அளவு தனிமங்கள் இல்லாதிருப்பதால் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us