PUBLISHED ON : செப் 09, 2016

நான் கடலூர் மாவட்டம் தா.சோ.பேட்டையில், 10ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியர்தான் எங்களுக்கு சமூக அறிவியல் பாடம் எடுப்பார்.
ஒருநாள்
சரியான விடையை தேர்ந்தெடு பகுதியில் இருந்து கேள்விகளை கேட்டார். ஒரு
மாணவரிடம் வரிசையாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மாணவனோ
மேஜையின் அடியில் புத்தகத்தை திறந்து வைத்து, பார்த்து பார்த்து பதிலை
சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர் சரியான பதில்களைச் சொன்னதால் மகிழ்ந்து
போன ஆசிரியர், திடீரென்று கேள்வியை மாற்றி கேட்டுவிட்டார். அந்த மாணவனோ,
வரிசையாக உள்ளபடி நினைத்து விடையை மாற்றி சொல்லிவிட்டான். உடனே, மாணவர்கள்
அனைவரும், 'கொல்' என்று சிரித்துவிட்டோம். தலைமையாசிரியர், 'ஏன்
சிரிக்கிறீர்கள்... அந்த மாணவன் விடையை மாற்றி சொன்னாலும், அவன் பாடத்தை
படித்து வந்திருக்கிறான். அவனிடம் 'சரக்கு' இருக்கு என்றார் தலைமை
ஆசிரியர்.
மறுபடியும் சிரித்தோம்.
'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்றார் தலைமை ஆசிரியர்.
நான் உடனே, 'அவன் அப்பா, 'சரக்கு' வியாபாரி சார்...' என்றேன்.
இதைக் கேட்டு, தலைமையாசிரியரும் சிரித்துவிட்டார்.
-கு.ரஜினிகலை, பிச்சாவரம்.
