தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜெபர்ஸனின் பிரமாணங்கள்!

ஜெபர்ஸனின் பிரமாணங்கள்!

ஜெபர்ஸனின் பிரமாணங்கள்!


PUBLISHED ON : ஜன 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவராக இருந்த தாமஸ் ஜெபர்ஸன் என்பவர், அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பிரமாணங்களை 'ஸ்மித்' என்பவருக்கு 1825-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1. இன்றைக்கு செய்ய முடியும் என்பதை, ஒருபோதும் நாளைக்குத் தள்ளிப் போடாதே.

2. உன்னால் செய்யக்கூடிய வேலையை, மற்றவரைச் செய்யும்படி ஒருபோதும் வற்புறுத்தாதே.

3. பணம் உன்னிடம் வரும் வரை, அதைச் செலவு செய்யாதே.

4. இது மிக மலிவானது என்று உனக்கு வேண்டாத பொருளை வாங்காதே. அது உனக்கு விலை அதிகமானதாகும்.

5. பசி, தாகம், குளிர் ஆகிவற்றை விட, பெருமை உனக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும்.

6. மிகக் குறைவாகச் சாப்பிட்டு விட்டோமே என வருந்தத் தேவையில்லை.

7. நாம் மனதாரத் செய்யும் ஒரு காரியம், நமக்கு ஒருக்காலும் துன்பம் தராது.

8. நமக்கு ஒருபோதும் தீமை நேரிடா வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நம்மைப் பாதிக்கும்.

9. வேண்டாவெறுப்பாக எதையும் செய்யாதே.

10. கோபங்கொண்டால் 5 வரை எண்ணி, அதன்பின் பேசு; மிகக் கோபங்கொண்டால் 100 வரை எண்ணு; பிறகு பேசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us