PUBLISHED ON : மே 18, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 100 கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
கருப்பட்டி - 250 கிராம்
நெய் - 100 கிராம்
வறுத்த முந்திரி, திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை:
பச்சரிசி, பாசிப் பருப்புடன், தேவையான நீர் சேர்த்து, குழைய வேக விடவும். கருப்பட்டியை, சிறிதளவு நீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து, வடி கட்டவும். அடி கனமான பாத்திரத்தை, அடுப்பில் வைத்து, வேகவைத்த அரிசி, பருப்பு கலவை, கருப்பட்டி கரைசலையும் சேர்த்து, நன்றாக கிளறவும்.
அதன் மீது, காய்ச்சிய நெய்யை ஊற்றி, ஏலக்காய்த் துாள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பரிமாறவும். சத்துக்கள் நிறைந்தது; குழந்தைகள் விரும்பி உண்பர்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.
