PUBLISHED ON : மே 18, 2018

தினமும் காலையில், இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில், எந்த பிரச்னையும் இல்லை என்று இன்றைக்கும், கிராமத்தில், பெரியவர்கள் கூறுவர்; அப்படி என்னதான் செய்கின்றன அவை...
சின்னச் சின்ன துண்டுகளாக இஞ்சியைக் காலையில் சாப்பிடலாம். இல்லா விட்டால், இஞ்சி சாறு எடுத்து, ஐந்து நிமிடம், அப்படியே வைத்தால், அடியில், வெள்ளையாகப் படியும்.
மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால், உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக் கோளாறு, சளித்தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.
பகலில், சுக்குமல்லிக் காபி சாப்பிட்டு வந்தால், சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கி விடும்.
அதே போல், இரவில், துாங்குவதற்கு முன்பாக, கடுக்காய் சாப்பிடுவது நல்லது.
மூன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் காய்ச்சவும். அவை, பாதியாக சுண்டிய பின், நன்கு ஆற வைத்துக் குடிக்கவும். இப்படி, தொடர்ந்து குடித்து வந்தால், மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, மூலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்.
