தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (111)

இளஸ்... மனஸ்... (111)

இளஸ்... மனஸ்... (111)


PUBLISHED ON : மே 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 1 படிக்கும் மாணவன் எழுதிக் கொண்டது. 'இளஸ்... மனஸ்...' பகுதியை, நீண்ட நாட்களாக படித்து வருகிறேன். அதனால், என் குறையை, உங்களிடம் கூறுகிறேன்...

சின்ன வயதிலிருந்தே குண்டாக இருப்பேன்; இப்போ ரொம்ப குண்டா இருக்கேன். எனக்கு, இரண்டு பிரச்னைகள்... முதலாவது, என் மார்பு பெரிதாக, பெண்களை போல இருக்கு. வெளியே செல்லும் போது, எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க ஆன்டி.

'சர்ஜரி செய்யலாம்'ன்னு மருத்துவர் சொன்னாங்க; பின்னாடி, ஏதாவது சிக்கல் வந்துடுமோன்னு பயப்படுறாங்க, என் பெற்றோர். இயற்கையாய் குறைக்க, ஏதாவது வழி சொல்லுங்க. இதற்கென சிறப்பு மருத்துவர்கள் இருந்தாலும் சொல்லுங்க...

இரண்டாவது பிரச்னை... என் இடுப்பு, ரொம்ப பெரிசா இருக்கு; கடந்த, மூன்று மாதங்களாக, 'ஜிம்' செல்கிறேன்; எந்த பயனும் இல்லை. இப்போது, 85 கிலோ இருக்கேன்; பசங்க ரொம்ப கிண்டல் பண்றாங்க; 'டிரஸ்' போட்டா, அசிங்கமா இருக்கு; இடுப்பையும் குறைக்க வழி சொல்லுங்க ஆன்டி...

அன்பு மகனே... உன்னோட கஷ்டம் புரியுது... தற்போதுள்ள, உணவு பழக்க வழக்கங்களால், இன்றைய இளம் தலைமுறையினர் ரொம்ப குண்டாக உள்ளனர். இதனால் ஏற்படும் பிரச்னைகள் தான் இவை. நிறைய ஆண் பிள்ளைகள், இந்த மாதிரி பிரச்னைகளை சந்திக்கின்றனர். நீயாவது எழுதி விட்டாய்... பலர், இந்த காரணங்களை, தங்களுக்குள்ளேயே மறைத்து வைத்து, பெற்றோரிடம் கூட சொல்ல, வெட்கப்பட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

எல்லாப் பிரச்னைகளுக்குமே தீர்வு உண்டு; பெரியவர்களிடம் மறைக்காமல் பகிர்ந்துக் கொண்டால், சரி செய்து விடலாம். தற்போது, உன்னைப் போல, நிறைய ஆண் பிள்ளைகள், இந்தப் பிரச்னையை சந்திக்கின்றனர். அதனால், கவலைப்படாதே; இதை சரி செய்து விடலாம். காரணம், ஆண்கள், பருவ வயதை அடையும் போது, பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு காரணமான, 'ஈஸ்ட்ரோஜன்' அதிகமாக சுரப்பது தான், உன்னோட மார்பக வளர்ச்சிக்கு காரணம்.

ஈஸ்ட்ரோஜனை, அதிகம் சுரக்க வைக்கும், சென்னா, பச்சை பட்டாணி, சோயா போன்ற உணவுகளை, கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்னை உள்ளவர்கள் எல்லார் முன்பாக, சட்டையை கழட்ட, வெட்கப்படுவர்; கூன் போட்டு நடப்பர்; மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். கட்டாயமாக, நீ, உன் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும்.

இரவில் தூங்கும் முன், ஒரு கைபிடி கொத்துமல்லியுடன், அரை மூடி எலுமிச்சை பழத்தை தோல் நீக்கி, அப்படியே அரைத்தால், ஒரு உருண்டை அளவு வரும். அதை, சாப்பிட்டு வர, கொழுப்பு குறையும்.

அத்துடன், ஒண்ணரை அளவு நெல்லிக்காயை, மிக்சியில் அரைத்து, வெந்நீரீல் கொதிக்க வைத்து, ஆறிய பின், வடி கட்டி அதிகாலையில், வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் எடை குறையும்.

முக்கியமாக, தினமும், புஷ் அப்ஸ், ஸ்கிப்பிங் இரண்டையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவை, ஒரே இடத்தில் குவிந்திருக்கும் மார்பு கொழுப்பை, பரவலாக்கும். தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் தெரியும்.

உடனே தீர்வு வேண்டுமானால், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொள். பயப்பட தேவையில்லை. இப்போது, இது சர்வ சாதாரணம் ஆகி விட்டது.

நீ, எந்த ஊர் என்று கடிதத்தில் குறிப்பிடவில்லை. அதனால், சென்னையை சேர்ந்த, சிறந்த பிளாஸ்டிக் சர்ஜன் முகவரி தருகிறேன்; தொடர்பு கொள். 'மேல் பூப்ஸ் சர்ஜரி' என்று இதைச் சொல்வர். மார்பில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை, அக்குள் பகுதியில், ஒரு துளை போட்டும், நிப்பிளை சுற்றி, துளை போட்டும் அகற்றி விடுவர்.

எந்த வடுக்களும், உடலில் தெரியாது. காலையில் ஆப்ரேஷன் நடை பெற்றால், மதியம் வீட்டிற்கு சென்று விடலாம்; அத்தனை சுலபம். இரண்டே நாட்களில், பள்ளிக்கு சென்று விடலாம். அத்தனை எளிதாகி விட்டது மருத்துவம். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

டாக்டர் கார்த்திக் ராம், தொலைபேசி எண்:94440 35171 - 91766 22001.

உன் மனக் குறை நீங்கி, அழகான உடல் அமைப்பைப் பெற வாழ்த்துகள்!

- அக்கறையுடன், ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us