தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காஷ்மீர் அழகி! (2)

காஷ்மீர் அழகி! (2)

காஷ்மீர் அழகி! (2)


PUBLISHED ON : ஜூன் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: விலிசியா நாட்டு இளவரசன், பறக்கும் மரக்குதிரையிலிருந்து ஒரு மாளிகையின் மாடத்தில் இறங்கினான். அங்கு, ஒரு ராஜகுமாரி துாங்கி கொண்டிருந்தாள். இனி -

'கவலைப்படாதீர்; உங்களைக் காப்பாற்றுகிறேன்...' என்று கூறிய இளவரசி, துாங்கிக் கொண்டிருந்த அடிமைப் பெண்களைக் கூப்பிட்டாள்.

'இவர் நம் விருந்தாளி; உணவும், தங்குவதற்கும் ஏற்பாடு செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டு, 'இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்...' என கேட்டாள்.

'எனக்கு இப்போது பசிக்கிறது; சாப்பிட்டு, ஓய்வெடுத்த பின், என் கதையை கூறுகிறேன்...' என்றான் இளவரசன்.

இதற்கு முன் இப்படிப்பட்ட அழகிய வாலிபனைக் கண்டதில்லை இளவரசி.

கோடை காலத்தில் தங்க அவளுக்கென கட்டப்பட்ட தனி மாளிகையில், தோழியருடன் தங்கி வந்தாள். இளவரசனையும், அங்கேயே தங்க வைத்தாள்.

'மணந்தால், இவனைத் தான் மணப்பது' என்று முடிவு செய்தாள்.

தன்னைப் பற்றியும், பறக்கும் மரக்குதிரை பற்றிய விவரங்களையும் தெரிவித்த இளவரசன், 'இளவரசியே... என் பிரிவால், என் பெற்றோர் வருந்திக் கொண்டிருப்பர்; நான், ஊருக்குச் சென்று, பெற்றோருடன் வந்து, முறைப்படி, பெண் கேட்கிறோம்...' என்றான்.

'சில நாட்களாவது, தங்கி செல்ல வேண்டும்...' என்று, இளவரசி கேட்டதால், அவள் வேண்டுகோளை ஏற்று, ஒப்புக் கொண்டான்.

சில நாட்கள் சென்றன -

இளவரசனுக்குப் பெற்றோர் நினைவு வந்து விட்டது.

'ஊருக்குச் செல்ல வேண்டும்' என்று கூறினான்.

'உங்களைப் பிரிந்து, உயிர் வாழ முடியாது...' என்று, அழ ஆரம்பித்தாள், இளவரசி.

'சரி... நீயும் என்னுடன் வா; மரக்குதிரையில் அழைத்துச் செல்கிறேன். திருமணம் முடித்து, உன் தந்தையைக் காண அழைத்து வருகிறேன்...' என்றான்.

இதைக் கேட்டதும், மிக்க மகிழ்ச்சியடைந்தாள் இளவரசி.

விலிசியா நாட்டு எல்லையை அடைந்ததும், மரக்குதிரையை இறக்கினான். ஊரெல்லாம் கருப்புத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மக்கள், கருப்பு உடை அணிந்து, துக்கத்துடன் செல்வதை, கண்டான் இளவரசன்.

உடனே, 'ஏன் கருப்பு உடைகள் அணிந்திருக்கிறீர்கள்...' என்று விசாரித்தான்.

அவனைக் கூர்ந்து கவனித்த மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, 'இளவரசே... தாங்கள் இவ்வளவு காலமாக திரும்பி வராததால், இறந்திருக்க கூடுமென்று, இறுதிக் கடன் செய்ய நிச்சயித்துள்ளனர். அதனால் தான், கருப்பு உடை அணிந்திருக்கிறோம்...' என்றனர்.

தாமதிக்காமல், மரக்குதிரையில் அரண்மனைக்குச் சென்றான் இளவரசன். அவனைக் கண்ட அடிமைகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இளவரசியை அந்தப்புரத்தில் விட்டு, தந்தையைப் பார்க்க அரசவைக்குச் சென்றான்.

இளவரசன் திரும்பி வந்ததை அறிந்து, மிக்க மகிழ்ச்சியடைந்தார் மன்னர். மரக்குதிரை பற்றிய முழுக்கதையையும் அரசருக்குச் சொன்னான். அந்த மரக்குதிரையை உருவாக்கிய இளைஞனை விடுதலை செய்ய உத்தரவிட்டார் அரசர்.

காவலர்கள், விடுவிக்கச் சென்ற போது, காரணம் கேட்டான் இளைஞன்.

இளவரசன், மரக் குதிரையில் அழகிய இளவரசியை கூட்டி வந்ததையும், அவர்களுக்கு மன்னர் மணமுடிக்க போவதையும், கூறினான், காவலன்.

இதைக் கேட்டதும், இளைஞன் உள்ளத்தில், ஒரு வஞ்சக எண்ணம் தோன்றியது.

நேராக அந்தபுரம் சென்ற இளைஞன், 'அரசவைக்கு மரக் குதிரையியில், இளவரசியை அழைத்து வரச் சொன்னார் இளவரசர்...' என்று அடிமைகளிடம் கூறினான்.

இளவரசியை மரக்குதிரையில் ஏற்றி, அதில் ஏறி அமர்ந்த இளைஞன், விசையைத் திருக, மரக் குதிரை எழும்பிப் பறந்தது.

சிறிது நேரத்தில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளவரசி, இளவரசனிடம் சேர்க்குமாறு கெஞ்சினாள்.

அவள் வேண்டுகோளை பொருட்படுத்தாமல், 'உன்னை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்...' என்றான் இளைஞன்.

அரண்மனையில் -

மரக்குதிரையில் இளவரசியைக் கடத்திச் சென்றதை அறிந்த இளவரசன். மன வருத்தம் கொண்டான். எப்படியும் இளவரசியைக் கண்டுபிடித்து, கூட்டி வரும் தீர்மானத்துடன், துறவியைப் போல் வேடமணிந்து, ஊர் ஊராக, தேடினான்.

ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, இந்தியாவில் உள்ள, காஷ்மீர் மாநிலத்தில், மரக்குதிரையைக் இறக்கி, உணவு தேடினான் இளைஞன். பழங்களை கொண்டு வந்தான். அவற்றை சாப்பிட்டதும், இளவரசிக்கு, தெம்பும், தைரியமும் வந்தது.

அச்சமயத்தில், அவ்வழியாக, சிலர் குதிரையில் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும், 'உதவி... உதவி...' என்று கத்தினாள் இளவரசி.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us