தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காஷ்மீர் அழகி! (3)

காஷ்மீர் அழகி! (3)

காஷ்மீர் அழகி! (3)


PUBLISHED ON : ஜூன் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: துறவியை போல் வேடமணிந்து, ஊர் ஊராக சுற்றி, இளவரசியை தேடினான் விசிலியா நாட்டு இளவரசன். இனி -

குதிரையில் வந்தவர்களில் அந்நாட்டு அரசரும் இருந்தார். அவர், 'என்ன நேர்ந்தது...' என்று விசாரித்தார். இளவரசி அழுதபடியே, விவரத்தைக் கூறினாள்.

இதைக் கேட்டதும், இளவரசியை கடத்தி வந்த இளைஞனைக் கொன்று, இளவரசியை அரண்மனைக்கு அழைத்து சென்றார் இந்தியாவில் உள்ள காஷ்மீர் அரசர். தன்னை விலிசியா நாட்டிற்கு அனுப்ப வேண்டினாள் இளவரசி.

ஆனால் அரசர், 'உன்னை நானே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்...' என்றார். பதைபதைத்த இளவரசியை சிறை வைத்து, தாதியரை காவலுக்கு நியமித்தார்.

திருமணத்திற்கு, நாளும் குறித்தார். அரசரிடம் இருந்து தப்பி செல்ல, இளவரசி பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்தாள். வைத்தியர்களை அழைத்து, குணப்படுத்தக் கூறினார் அரசர். நோய் இருந்தால் தானே குணப்படுத்த முடியும்.

இளவரசியை தேடி அலைந்த இளவரசன், இந்தியாவிலுள்ள காஷ்மீருக்கு வந்தான். அங்கு, இளவரசியின் நோய் குறித்து, மக்கள் பேசியதைக் கேட்டான்.

உடனே, மருத்துவர் போல் வேடம் அணிந்து, அரண்மனைக்குச் சென்றான். அரசரை சந்தித்து, இளவரசியின் நோயைக் குணப்படுத்துவதாக உறுதி கூறினான். இளவரசி இருந்த அறைக்கு, அவனை அழைத்து செல்ல உத்தரவிட்டார்.

அறை வாசலில், 'வைத்தியம் பார்க்கும் போது, வேறு எவரும் இருக்க கூடாது...' என்று காவலர்களை வெளியே நிறுத்தி, அறைக்குள் சென்றான்.

முகத்தில் அறைந்தபடி, இளவரசி அழுது கொண்டிருந்தாள். அவளை நெருங்கி, 'என்னை தெரியவில்லையா...' என்றான். இளவரசன் குரலைக் கேட்டதும், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து, விவரங்களைக் கூறினாள் இளவரசி.

'கவலைப்படாதே... எப்படியாவது மீட்டுச் செல்கிறேன்; மரக்குதிரை என்ன ஆயிற்று...' என்று கேட்டான், இளவரசன்.

'அதை இயக்கத் தெரியாததால், பத்திரமாக வைத்திருப்பார் அரசர்...' என்றாள் இளவரசி.

'சரி... இன்று வியாதி குணமடைந்து விட்டதாக நடந்து கொள்; விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து, அரசரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிரு; மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றான்.

அவ்வாறே நடித்த இளவரசி, அரசருடன் உணவருந்தினாள். அளவற்ற மகிழ்ச்சியடைந்த அரசர், மருத்துவர் போல் இருந்த இளவரசனை பாராட்டினார்.

அப்போது, 'அரசே... இளவரசியின் நோய் பூரண குணமடைந்து விட்டதாக கூற முடியாது. இங்குள்ள மரக்குதிரையின் சக்தியால் அவள் நோயாளி ஆகிவிட்டாள். அவளை, தற்காலிகமாகக் குணமடைய செய்துள்ளேன். முழு அளவில் குணமடைய, அந்த மரக்குதிரையில் அமர்த்தி மந்திரங்கள் சொல்ல வேண்டும்...' என்றான் இளவரசன்.

'சரி என்னுடன் வா; அந்த மரக்குதிரையை காட்டுகிறேன்...' என்றார், காஷ்மீர் அரசர்.

'அந்த குதிரையை பொது மைதானத்துக்கு கொண்டு வாருங்கள். நாட்டு மக்களை, அங்கு கூட செய்யுங்கள். இளவரசியை, நன்கு அலங்கரித்து, உரிய ஆடை ஆபரணங்களுடன் அங்கு அழைத்து வர வேண்டும். அந்த மைதானத்தில், இளவரசிக்கும், மரக்குதிரைக்கும் மந்திரீகம் செய்வேன்...' என்றான், இளவரசன்.

அதன்படி, நாட்டின் மையப்பகுதி மைதானத்தில், எல்லா ஏற்பாடுகளையும் செய்தார், அரசர்.

அங்கு வந்த இளவரசன், ஒரு வாசனை திரவியத்தை தெளித்தான். மந்திரம் ஜெபிப்பதைப் போல், பாவனை செய்தான். பின், இளவரசியைக் மரக்குதிரையில் அமரச் சொன்னான். அவள் அமர்ந்தாள். இளவரசனும் அவள் அருகே அமர்ந்து, விசையைத் திருகினான்.

மறு கணம், மாயக்குதிரை எழுந்து பறந்தது.

இதை கண்ட அரசர், 'பிடியுங்கள்... பிடியுங்கள்...' என்று, காவலர்களை விரட்டினார். குதிரையில் பறந்த இளவரசன், 'அரசே... எந்த பெண்ணையாவது மணக்க விரும்பினால், முதலில், அவள் விருப்பத்தை தெரிந்து கொள்ளுங்கள்...' என்று கூறினான்.

மாயக்குதிரை, விலிசியா நாட்டுக்குச் சென்றது. அங்கு, இருவருக்கும் திருமணம் நடந்தது.

- முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us