PUBLISHED ON : ஜூன் 28, 2019

அ நிறம் | அளவு
தமிழக காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 20 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். பணி நிமித்தமாக, வெளியூர் சென்றாலும், தினமலர் நாளிதழ்களை பெட்டகமாக, குடும்பத்தினர் சேகரித்து வைப்பர். திரும்பியதும் தவறாமல் படிப்பேன்.
தினமலர் இணைப்பு இதழ்களை, எட்டு தொகுப்புகளாக தொகுத்துள்ளேன். அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். என் தெருவில் வசிப்பவர்களிடமும், படிக்க சொல்கிறேன்.
இந்த அரிய பெட்டகங்களை, நுாலகத்துக்கு நன்கொடையாக கொடுத்து விட, என் குடும்பத்தாரிடம் கூறி உள்ளேன்.
பொதுவாக, 50 வயதை தாண்டி விட்டால், அனைவரும் குழந்தைகள் தான். எனக்கு, 63 வயதாகிறது. ஒரு குழந்தையாக, சிறுவர்மலர் இதழை விரும்பிப் படிக்கிறேன்! உயர்ந்த, உற்ற நண்பனாக போற்றிவருகிறேன்.
- சு.கணபதி சுப்பிரமணியன், சிவகாசி.
