தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கேழ்வரகு மோர் களி!

கேழ்வரகு மோர் களி!

கேழ்வரகு மோர் களி!


PUBLISHED ON : மே 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:



கேழ்வரகு மாவு - 2 கப்

கெட்டி மோர் - 2 கப்

அரிசி மாவு - 100 கிராம்

வேர்கடலை - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 4 தேக்கரண்டி

சீரகம் - சிறிதளவு

நெய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:



கேழ்வரகு, அரிசி மாவுகளுடன், மோர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, வேர்கடலை, சீரகம், கருவேப்பிலையை வறுத்து, மாவு கலவையை கொட்டி கிளறவும். கெட்டியாக சுருண்டு வரும் போது இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியவுடன், விரும்பும் வடிவில் துண்டுகளாக்கவும்.

சத்தும், சுவையும் மிக்க, 'கேழ்வரகு மோர் களி' தயார்; குழந்தைகள் விரும்பி உண்பர்.

- மாலதி நாராயணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us