தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க...

தெரிஞ்சுக்கோங்க...

தெரிஞ்சுக்கோங்க...


PUBLISHED ON : ஜூன் 07, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசுவதால் கண்ணீர் ஏன் வருகிறது தெரியுமா குட்டீஸ்?

கலவரங்கள் நிகழும்போது கலவரத்தில் ஈடுபடுபவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதுண்டு.

குளோரோசீட்டோபினோன் மற்றும் குளோரோ பென்ஸைஸ் இடிமெலோனோநைட்ரைஸ் என்னும் இருவகைப் வேதிப்பொருட்களே பொதுவாக கண்ணீர்ப் புகைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் முறையே CS மற்றும் CN என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது CN மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளினுள் அவை திரவமாக்கப்பட்ட நிலையில் இருக்கும். குண்டுகள் உடையும் போது அழுத்தம், குறைந்து வாயுநிலையில் வெளிப்படுகிற வேதிப்பொருட்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.

உடலில் ஈரநிலையிலுள்ள கண், மூக்கின் உட்பகுதி, வாய், நுரையீரல் பகுதிகளில் இவ்வேதிப்பொருட்கள் படும்போது கண்ணீர், தும்மல், இருமல் உண்டாகின்றன. அதிக ஈரப்பதமுள்ள இடத்தில் அதிக அளவு அமிலப் பொருட்கள் உருவாகி கடுமையான எரிச்சல் உண்டாகும். கண்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் அங்கு அதிக எரிச்சல் உண்டாகி, கண்ணீர் உருவாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us