PUBLISHED ON : ஜூன் 07, 2013

அ நிறம் | அளவு
ஐஸ்கிரீம் வழியாகத்தான் வெனிலாவின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. உலக மார்க்கெட்டில் குங்குமப் பூவிற்கு அடுத்த இடம் வெனிலாவிற்குத்தான். வெனிலாவின் தாயகம் மெக்ஸிகோ. ஆனால், இப்போது உலகளவில் 20 நாடுகளில் அதிகம் பயரிடப்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப் படுத்தப் படுகிறது. வெனிலா பச்சைக் காய்களின் விலை கிலோ 3500. இதுவே பதப்படுத்தப் பட்டால், கிலோ 22,500.
இயற்கையாக நடைபெற முடியாத பூ அமைப்பு உடையது. இதன் காய்கள் பீன்ஸ் போன்று இருக்கும். தமிழ்நாட்டில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெனிலா பயிராகிறது. தற்போது காப்பித் தோட்டப்பயிர் தென்னை மரங்கள் இடையில் ஊடு பயிராக பயிரிடுகின்றனர். இந்தியாவில் 1835ல் தான் அறிமுகமானது.
