தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கோலாகல கண்ணன்!

கோலாகல கண்ணன்!

கோலாகல கண்ணன்!


PUBLISHED ON : ஆக 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்தர்கள் மனதில், தீராத குறும்புத் தனங்களால் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான். மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

* ஆண்டுதோறும், ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. விழாவில், தேரோட்டம், உறியடி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

* கேரளா, குருவாயூர் கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள பக்தர்கள் இங்கு நடக்கும் ஸ்ரீ ஜெயந்தி விழாவை காண, குவிவது வழக்கம்

* கிருஷ்ணர், நடுநிசியில் பிறந்ததாக கருதப்படுவதால், பூஜைகள், மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன

* நடை பழகும் குழந்தை, வீட்டிற்கு வருவது போன்று, கால் தடயங்களை, வீட்டு வாசலிலிருந்து பூஜையறை வரை கோலமிடுவது, பக்தர்கள் வழக்கம். குழந்தைகளுக்கு விருப்பமான சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்களையும், கிருஷ்ணருக்கு படைப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us