தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மொழியை பெயர்த்த மாணவன்!

மொழியை பெயர்த்த மாணவன்!

மொழியை பெயர்த்த மாணவன்!


PUBLISHED ON : ஆக 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பிளஸ் 2 கல்வி திட்டம் துவங்கிய புதிது. தேனி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக சேர்ந்தேன். அனுபவம் மிக்க ஆசிரியர்களிடம், கற்பித்தலில் சுலபமாக வெற்றி பெறும் முறை பற்றி கேட்டேன்.

பலரும், 'வகுப்பில் ஆங்கிலத்தில் பேசினால் தான், படிக்கும் ஆர்வமும், ஆசிரியர் மீது, மதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படும்; எதிர்காலத்துக்கு பயன்படும்...' என்றனர். அதன்படி, முழுக்க ஆங்கிலத்தில் வகுப்பு எடுக்க முடிவு செய்தேன்.

ஒரு வகுப்பில், மாணவர்களின் பெயர், ஊர், ஆர்வம் போன்ற விபரங்களை கேட்டேன். ஒருவன் எழுந்து, 'என் பெயர் ரமேஷ்; ஊர் பெயர் 'மம்மி பேட்...' என்றான். அந்த பெயர் சுவாரசியம் தரவே, 'மம்மி பேட் எங்கே இருக்கு...' என்றேன்.

'நீங்க ஆங்கிலத்தில் பேசச் சொன்னதால், 'அம்மா பட்டி' என்ற என் ஊர் பெயரை, 'மம்மி பேட்' என்று மொழி பெயர்த்து கூறினேன் ஐயா...' என்று விளக்கினான். வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது.

மேல்நிலை வகுப்புகளில், ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். அந்த சம்பவம் நடந்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்த நிகழ்வை, இப்போது நினைத்தாலும் வாய்விட்டு சிரித்து விடுகிறேன்.

- மு.கருப்பையா, தேனி.

தொடர்புக்கு: 96292 27475


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us