தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தலைவா!

தலைவா!

தலைவா!


PUBLISHED ON : நவ 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொள்ளக்குடி என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில், வாத்துக்காரர் ஒருவர் வாத்துக்களை எல்லாம் பராமரித்து வந்தார்.

அந்த வாத்துக்களின் கூட்டத்தில் 'மேக்கா' என்ற வாத்து இருந்தது. அந்த மேக்கா வாத்து மற்ற வாத்துக்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்தது.

ஒருசமயம் வாத்துக்கள் எல்லாம் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மேக்கா ஒரு வரப்பைக் கடக்க முயற்சித்தது. அப்போது வரப்போரமாக, ஏதோ தடங்கள் தெரியவே, அதனையே கூர்ந்து கவனித்தது.

அது நரியின் காலடித் தடங்கள்தான் என்பதை மேக்கா உணர்ந்தது. உடனே, அது மற்ற வாத்துக்களை எல்லாம் அழைத்தது.

''நண்பர்களே! இந்த இடத்தில் நாம் மேய்ந்து கொண்டிருந்தால், நமக்கு திடீரென எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால் நாம் வேறு இடத்திற்குச் செல்லலாம்,'' என்றது.

தலைவர் வாத்தின் பேச்சை ஏற்றுக்கொண்ட மற்ற வாத்துக்களும் உடனடியாக அங்கிருந்து கிளம்பத் தொடங்கின.

மேக்கா எல்லா வாத்துக்களையும் அழைத்துக்கொண்டு, வேறொரு இடத்திற்கு வந்தது. அந்த இடத்தில் எல்லா வாத்துக் களும் கூட்டமாக நின்றபடி மேய்ந்து கொண்டிருந்தன.

உடனே மேக்கா வயல் ஓரங்களை சந்தேகத்தோடு பார்த்தது. அந்த இடத்திலும் நரியின் காலடித் தடங்கள் காணப்படுவதை உணர்ந்தது. உடனே அவசரமாக மற்ற வாத்துக்களை அழைத்தது.

''நண்பர்களே! நாம் இந்த இடத்தை விட்டு உடனடியாகச் செல்லக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் உடனடியாக நம் இடத்திற்குச் சென்று விடுவோம். அதுதான் நமக்குப் பாதுகாப்பான இடம்,'' என்றது.

மற்ற வாத்துக்களோ அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்தன.

''தலைவரே, உமக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லையே. எதற்காக வேண்டி இப்படி பயப்படுகிறீர்? உமக்கு என்னவாகி விட்டது?'' என்று கேட்டது மற்ற வாத்துக்கள்.

''நண்பர்களே, இந்த இடத்தைச் சுற்றிலும் நரி ஊடுருவியிருக்கிறது. இந்த வயல் வெளியைச் சுற்றிலும் பல இடங்களில் நரியின் காலடித்தடங்கள் இருப்பதை நான் கவனித்தேன். அதனால்தான் சொல்கிறேன் இந்த இடத்தைச் சுற்றிலும் நமக்கு ஆபத்து காத்திருக்கின்றன. அந்த நரியால் நமக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதற்குள் நாம் இந்த இடத்தை விட்டு சென்று விடுவது நல்லதென்று நினைக்கிறேன்,'' என்றது மேக்கா.

அதனைக் கேட்டதும், மற்ற வாத்துக்கள் மீண்டும் கோபத்துடன் மேக்காவை பார்த்தன.

''தலைவரே! நீர் எங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். அந்த நரி வந்தால் நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம். நீர் வேண்டுமானால் நமது இருப்பிடத்திற்குச் சென்று ஓய்வெடுத்துக்கொள்ளும்,'' என்றன.

'நம் நண்பர்கள் எல்லாம் நம் பேச்சினை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் நாம் நம் இருப்பித்திற்குச் சென்று பாதுகாப்பாக இருந்திட வேண்டியதுதான்' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டபடி உடனடியாக, அங்கிருந்து புறப்பட்டது மேக்கா.

மற்ற வாத்துக்களோ மேக்கா செல்வதைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் இரை தேடிக் கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் வாத்துக்கள் எல்லாம் அதிர்ச்சியடையும் படியாக நரி ஒன்று வந்தது.

நரியைக் கண்ட வாத்துக்கள் செய்வதறி யாது திகைத்தன. மரண பயத்தில், 'பாக்... பாக்...' என்று கத்தத் தொடங்கின.

வாத்துக்கள் எல்லாம் கத்துவதைக் கண்ட நரியோ வெறுப்புற்றது.

''வாத்துக்களே, தயவு செய்து நீங்கள் கத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் இப்போது உங்கள் எல்லாரையும் கடித்துக் குதறிச் சாப்பிட மாட்டேன். எனக்குத் தேவை உங்களில் ஒருவர்தான். எனவே, உங்களில் ஒருவர் மட்டும் இப்போது எனக்கு இரையாக வாருங்கள். அப்படி நீங்கள் வரவில்லை யென்றால், நான் உங்கள் அத்தனை பேரை யும் கடித்துக் கொன்று விடுவேன்,'' என்றது நரி.

அந்த வாத்துக்களின் கூட்டத்தில் கால் ஊனமான ஒரு வாத்து இருந்தது. அதற்கு திடீரென ஓர் யோசனை தோன்றியது.

'நம் தலைவர் மேக்கா நரியால் ஆபத்து வரப்போகிறது என்று நமக்கு எவ்வளவோ எடுத்துரைத்தார். நாம் அவர் பேச்சைக் காதில் வாங்கி அதன்படி நடக்காமல் இப்படி ஆபத்தில் மாட்டிக் கொண்டோம். இந்த நரியை நாம் உயிரோடு விட்டு வைத்தால், அது தொடர்ந்து நம் இனத்தார்க்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டே யிருக்கும். அதனால் நாம் எப்படியாவது இந்த நரியை ஒழிக்க வேண்டும். இந்த நரியை ஒழிக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் நம் தலைவர் மேக்காதான். அவர் இப்போது நம் இருப்பிடத்தில்தான் இருப்பார். எனவே, நாம் இந்த நரியை அங்கே அனுப்பி வைப்போம். அவர் இந்த நரியை கவனித்துக் கொள்வார்,' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டபடி அமைதி யுடன் நரியின் முன்னே தத்தி தத்தி வந்து நின்றது.

''நரியாரே, உமது நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நீர் எங்களில் ஒருவரை இப்போது சாப்பிடலாம். ஆனால், அவர் இங்கில்லை. எங்கள் இருப்பிடத்தில் அவர் தனியாக இருக்கிறார். அவர் எங்களை விட நன்கு கொழுத்துப் போய் இருப்பார். எனவே, அவரை நீ இன்று சாப்பிடு,'' என்று தைரியமாகக் கூறியது அந்த வாத்து.

''உங்கள் இருப்பிடம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்,'' என்று கேட்டது நரி.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us