PUBLISHED ON : மே 06, 2011

தேவையான பொருட்கள்:
டின்ட்டட் பேப்பர் ஏதாவது ஒரு கலர், 3 அடி நீளம், 6 அங்குலம் அகலத்திற்கு எடுத்துக் கொள்ளவும். மார்பிள் பேப்பர் இரண்டு கலர், கத்தரிகோல், ட்ரேசிங் பேப்பர், செல்லோ டேப் மற்றும் பசை
செய்முறை:
1) படத்தில் உள்ளபடி தோரணத்தை வரைந்து கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
2) இரண்டு கலர் மார்பிள் பேப்பரிலும், சிறிய சதுரங்கள் மற்றும் முக்கோணங்களை வரைந்து கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
3) ஆரஞ்சு மார்பிள் பேப்பரில் விளக்கு வரைந்து கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
4) இப்போது நாம் கட் செய்து வைத்திருக்கும் சதுர துண்டுகளை, தோரணத்தின் நடுவில் டைமன் வடிவில் ஒட்டவும்.
5) டைமனின் நடுவில் விளக்கை ஒட்டவும்.
6) தோரணத்தின் கீழ் நுனியில் சிறிய முக்கோணத் துண்டுகளை ஒட்டவும். வேண்டுமானால் வரிசையாக மணிகளை ஒட்டி மேலும் அழகுபடுத்தலாம்.
7) இப்ப தோரணத்தை உங்கள் வீட்டு வாசலில் தொங்கவிடுங்க!
என்னது எல்லாரும் எங்க வாங்கினீங்கன்னு கேட்கிறாங்களா?
