PUBLISHED ON : மே 06, 2011

டில்லியில் 'ஹெட்ஸ் ஆப் பார் டெய்ல்ஸ்' என்ற கடை உள்ளது. இங்கே நாய் பிரியர்களுக்கு தங்கள் செல்லப் பிராணிக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைக்கும். அழகு சாதனப் பொருட்களான, திருமணத்தின் போது அணியும் தொப்பிகள், கற்கள் பதிக்கப்பட்ட காலர் கொண்ட சட்டைகள், சாதாரண உடைகள், மேலும், செல்ல பிராணி கீழே விழுந்துவிடாமல் தூங்குவதற்கு ஏற்ற, நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட ஒரு மெத்தையின் விலை எவ்வளவு தெரியும்? வெறும் 12 ஆயிரத்து 500 ரூபாய்தான். டாக்ஸ்க்கு வந்த வாழ்வுதான் போங்க!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்டை சேர்ந்த நீதிபதி, பிரதிவாதி அனுப்பிய மனு ஒன்றின் முகவரியில் நீதிபதியை நண்பர் என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்ததும் நீதிபதி ஆத்திரம் அடைந்து மனுவில் குறிப்பிடும் போது, 'சார்' அல்லது 'மரியாதைக்குரிய...' என்று பொருள் படும்படி எழுதவேண்டும் என்று கூறினார். அதற்கு பிரதிவாதி மீண்டும், 'ஓ.கே., நண்பா?' என்று கூறியதும் பொறுமையிழந்த நீதிபதி, அந்த நபரை சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டார்.
