தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புட்டுகின பின்னும் பார்ப்போம்!

புட்டுகின பின்னும் பார்ப்போம்!

புட்டுகின பின்னும் பார்ப்போம்!


PUBLISHED ON : செப் 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹா... ஹா.... டைட்டில் ரைமிங்கா இருக்கில்ல...

கண்தானம்னா அப்படியே கண்ணை தோண்டிக்கிட்டு போயிடுவாங்கன்னு நெனைக்கிறாங்க. கண்ல இருக்கிற கருவிழியை மட்டும் தான் எடுப்பாங்க. அதுக்குப் பதில் மாற்றுக் கருவிழி பொருத்திடுவாங்க. இறந்தவங்க முகத்துல எந்த மாற்றமும் இருக்காது.

காமாலை, ஹெச்.ஐ.வி., ரத்த புற்றுநோயில் இறந்தவங்க கண்களை மட்டும் பயன்படுத்த முடியாது. அதேமாதிரி துாக்குப் போட்டு, விஷம் குடிச்சு இறந்தவங்களோட கண்களும் பயன்படாது. மற்றபடி, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம். 100 வயது முதியவரோட கண்ணை கூட, மூணு வயசுக் குழந்தைகளுக்கு பொருத்தலாம்; அந்த அளவுக்கு வித்தியாசமான உயிர்ப்பான உறுப்பு கண்.

உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேர், பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 சதவீதம் பேரின் பார்வையை மீட்கும் ஒரே வழி கண்தானம். ஆனால், தேவையில், 1 சதவீதம் அளவுக்கு கூட, கண்கள் தானமாக கிடைப்பதில்லை. இந்த சூழலில் கண்தானம் பெறுவதையே, பணியாக கருதி அலைந்து திரியும் சில நல்ல உள்ளங்களின் பணி, நிச்சியம் தெய்வீகப் பணி தான்!

கண்களை தானமாய் தருவோமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us