தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கழுதையை பார்!

கழுதையை பார்!

கழுதையை பார்!


PUBLISHED ON : ஜன 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு குடும்பஸ்தருக்கு திடீரென்று வாழ்வில் வெறுப்பு தோன்றியது. தானும் சிறந்த ஞானம் பெற்று ஒரு பெரிய ஞானியாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

அந்த ஊரில் இருந்த ஞானி ஒருவரிடம் சென்று தன் ஆசையைச் சொன்னார். இவரது ஆர்வத்தை நன்கு புரிந்து கொண்ட அந்த ஞானி, உபதேசம் மூலம் இவருக்கு ஞானத்தைத் தெரிய வைக்க முடியாது என்பதை <உணர்ந்து கொண்டார். சில நிகழ்வுகளை உணர வைத்தே இவருக்கு ஞானத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் ஞானிக்குப் புரிந்தது.

''உங்கள் வீட்டு வழியாக சலவைக்காரன் பொதி சுமக்கும் கழுதையைத் தினமும் கொண்டு செல்வதை உற்று நோக்கி இருக்கிறாயா?'' என்று கேட்டார்.

''பார்த்திருக்கிறேன் குருவே,'' என்றார் அந்தக் குடும்பஸ்தர்.

''அப்படியானால் நாளைக் காலை அக்கழுதை பொதியை சுமந்து கொண்டு செல்வதையும், மாலையில் பொதியை சுமந்து கொண்டு திரும்பி வருவதையும் நன்றாக உற்றுப் பார். அப்புறம் இங்கே வா,'' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் ஞானி.

அதேபோல மறுநாள் காலையில் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார் அந்தக் குடும்பஸ்தர். அழுக்குப் பொதியை சுமந்தவாறு கழுதை ஒன்று போய்க் கொண்டிருந்தது. சலவைக்காரன் அதனை மேய்த்துச் சென்றான். பின்னர் மாலையில் சலவை செய்த பொதியை சுமந்து கொண்டு திரும்பி வந்தது கழுதை.

இதனை நன்றாகக் கவனித்த அந்த குடும்பஸ்தருக்கு அதில் ஞானம் சம்பந்தமான பொருள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ''இந்த ஞானி ஏன் இப்படிக் குழப்புகிறார்?'' என்று மனதிற்குள்ளேயே நொந்து கொண்டார்.

மறுநாள் ஞானியிடம் சென்ற அவர், ''நீங்கள் சொன்ன மாதிரியே காலையிலும், மாலையிலும் பொதி சுமந்து செல்லும் கழுதையை நன்றாகக் கூர்ந்து பார்த்தேன் குருவே. ஆனால், அதில் ஞானம் தொடர்பாக ஏதுமில்லையே,'' என்றார் வருத்தத்துடன்.

இதைக்கேட்டு மெல்ல சிரித்த ஞானி, ''காலையில் நீ பார்த்த கழுதை சுமந்து சென்றது அழுக்கு மூட்டையை. ஆனால், அப்போது அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்கிறோமே, என்ற வருத்தம் அதன் முகத்தில் காணப்பட்டதா?'' என்று கேட்டார்.

''இல்லை'' என்றார் குடும்பஸ்தர்.

''சரி. மாலையில் சலவை செய்த துணி மூட்டையை சுமந்து வந்த கழுதை, அப்போதாவது மகிழ்ச்சியுடன் காணப்பட்டதா?'' என்று கேள்வி எழுப்பினார் ஞானி.

அதற்கும், ''இல்லை!'' என்றே பதிலளித்தார் அவர்.

''இப்படித்தான் துன்பம், இன்பம் ஆகிய இரண்டையுமே சமமாகப் பாவிக்க வேண்டும். அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான ஞானம்,'' என்று பதிலளித்தார் ஞானி.

இதைக் கேட்ட குடும்பஸ்தருக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்தது.

குட்டீஸ்... வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கும். இதை நாம் சமமாக பாவிக்க வேண்டும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us