PUBLISHED ON : ஜன 24, 2014

நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். அன்றிலிருந்து இந்தியா இந்தியர்களுக்கு என ஆனது. ஆனால், இந்தியா முழுமையாக இந்தியர்களின் ஆளுமையில் வந்த நாள், 1950 ஜனவரி 26ல். அன்றுதான் குடியரசானோம்.
எண்ணற்ற மன்னர்களின் முடியாட்சி, வெள்ளையர்களின் ஏகோபத்திய ஆட்சி இவற்றை எல்லாம் முடித்து வைத்து போக்கி விட்டு நாம் நம்மை ஆள ஆரம்பித்தபின் இந்தியா முழுமையான குடியாட்சி ஆனது.
பல்வேறு இடங்கள், மக்கள், மொழி, மதம், இனம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற வேறுபாடுகள் நிறைந்தது நம் நாடு.
ஒருவரை விட்டு விடாமல், அனைவருக்குமான ஆளுமையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் மிகப் பெரிய மேதைகளால் தேச அபிமானிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.
இன்று உலகில் பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்து உள்ளது. மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசே குடியரசாகும். குடியரசில் ஆண்டான் அடிமை வேறுபாடு இல்லை.
'எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓரினம்' என்ற அடிப்படையில் இயங்குவது. அனை வருக்கும் சம வாய்பை, உரிமையை அளிப் பதே இவ்வாட்சியின் அடிப்படையாகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை, 'நாம் இந்திய மக்கள், இந்தியாவில் பெருமை மிக்க தீர்மானங்களை ஏற்படுத்தி அதன் வழி யில் மக்களாட்சி சார்ந்த குடியரசை உருவாக்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வழங்கி எல்லாரிடமும் தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
நமது அரசியலமைப்பின் படி, இந்தியா குடியரசுத் தலைவரை முதன்மையாக கொண்ட குடியரசு நாடாகும். எல்லா நிர்வாக அதிகாரங் களும் குடியரசுத் தலைவருக்கே வழங்கப் பட்டுள்ளன.
இவர் பெயராலேயே எல்லா நடவடிக்கை களும் எடுக்கப்படுகின்றன. முப்படை களுக்கும் இவரே தலைமை அதிகாரியாகவும் செயல்படுகிறார்.
இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட ஆண்டான 1950ம் ஆண்டு முதல், திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் சாசனம் மிக உயர்ந்த கட்டுக்கோப்புகளை உள்ளடக்கிய ஆவண மாகும். பல வழிகளில் தனிச் சிறப்புடைய தாகும். ஒரு வகையில் தளர்வு, மற்றொரு வகையில் கடினம் இவற்றின் கலவையே இந்திய அரசியல் சாசனம்.
பல அரசியல் சாசனங்கள் தடுமாற்றம் கண்டபோது நமது அரசியல் சாசனம் பல திருப்புமுனைகளைக் கண்டு ஒவ்வொரு முறையும் பலத்துடன் உயர்ந்து நிற்கிறது.
என் தாய் நாடு!
இந்தியா என்னும் அற்புத தேசம் நமது. அதனின் மக்கள் அனைவரும் நம் சொந்தம். ஒட்டுமொத்தமாய் ஒவ்வொருவரும் தேசம் முன்னேற, வேறுபாடுகளை ஏற்று கொண்டு, ஒற்றுமைப்பட்டு செயல்பட்டு கனவை நனவாக்குவோம்.
வாழ்க இந்தியா! வாழ்க இந்திய குடியரசு!
