தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (12)

மாஜிக் மந்த்ரா! (12)

மாஜிக் மந்த்ரா! (12)


PUBLISHED ON : ஜன 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: வெள்ளிக்கோப்பையை திருடினாள் மங்காத்தா. அதை கண்டுபிடித்து எடுத்தாள் மந்த்ரா. இனி-

''ஏய்! அது என்னோடது. அதைக் கொடுத்துடு...!'' என்று மந்த்ரா மீது பறிக்கப் பாய்ந்தாள் .

''பேசாமல் ஒதுங்கிப்போ. வால்டிங் ஹார்சின் மூடியை மூடு. திருடனைத் தேடிப் போனவர்கள் திரும்பி வருகின்றனர். சீக்கிரம்... இல்லே... உன் குட்டை உடைத்து விடுவேன்!'' என்று எச்சரித்தாள் மந்த்ரா.

மாணவிகளின் பேச்சுக்குரல் கேட்கவே, மங்காத்தாவும், வடிவும் மரியாதை யோடு மந்த்ராவை விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

''திருடனைக் கண்ணில் காணவே இல்லை. எப்படியோ ஓடிப் போயிட்டான்!'' என்று ஏமாற்றத்துடன் கூறிக் கொண்டே ஜிம்னாஸ்டிக் கூடத்துக்குள் நுழைந்த எலிசபெத் டீச்சர், கையில் வெள்ளிக் கோப்பையுடன் தன்னை நோக்கி வரும் மந்த்ராவைக் கண்டு வியப்புடன், ''கோப்பை கிடைச்சிடிச்சா? எப்படி, எங்கே இருந்தது?'' என்று கேட்டார்.

''வால்டிங் ஹார்ஸ் பயிற்சி பெறுவோமே அதுக்குள்ளே இருந்தது டீச்சர். திருடன் தூக்கிட்டு ஓடும் போதும் மங்காத்தா பாத்துட்டு கூச்சல் போடவே, அதை அந்தப் பெட்டிக்குள் போட்டுவிட்டு ஓடிட்டான் போலிருக்கு!'' என்று சமத்காரமாக மங்காத்தாவைக் காட்டிக் கொடுக் காமல், சமாளித்தாள் மந்த்ரா.

''மாணவிகளா! உங்களைப் பாராட்டறேன்! விழிப்புணர்வோடு இருந்து வெள்ளிக் கோப்பையைத் திருடன் கையில் போகாமல் காப்பாற்றி விட்டீர்கள். இதைப் பத்திரமாக பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்!'' என்று வெள்ளிக் கோப்பையுடன் தன் அறைக்குப் போனார் எலிசபெத் டீச்சர்.

ஜிம்னாஸ்டிக் டீச்சர் அப்பால் போனதும், மங்காத்தா முகம் கடுக்க, மந்த்ராவின் அருகில் வந்தாள்.

''அருமையாக எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நாசமாக்கிட்டியே. எவளோ தட்டிக்கிட்டு போகப் போறா அந்த கப்பை... ம்... என்னை காட்டிக் கொடுக்காம காப்பாத் தினதினாலே, உன்னை சும்மா விடறேன். இதைப் பத்தி வேறு யார்கிட்டயாவது மூச்சுவிட்டே நடக்கிறதே வேறு!'' என்று மிரட்டினாள் மங்காத்தா.

மங்கத்தாவின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை மந்த்ரா. திருடவும் திருடிவிட்டு எவ்வளவு திமிராகப் பேசுகிறாள் என்று கோபம் வந்தது.

'சும்மா அலட்டிக் காதே... உன்னால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது... பேசாம ஓடு!'' என்றாள்.

'போ' என்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனால், திருட்டுக் குற்றவாளியை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடு என்று கூறினாள்.

மந்த்ரா எண்ணங்களை நிறைவேற்றக் காத்து கொண்டிருந்த குட்டிச் சாத்தான், உடனே மங்காத்தாவின் மீது அதை செயல்படுத்தி விட்டது. மங்காத்தா அவள் விருப்பப் படாமலேயே ஓடலானாள். தாவித் தாவி ஓடினாள். ஜிம்னாஸ்டிக் அரங்கத்தினுள் சுற்றிச் சுற்றி ஓடினாள்! நிற்க வேண்டும் என்று கால்களை அழுத்திப் பதித்த போதும் அது பதியவில்லை. அவளால் நிற்க முடியவில்லை.

''ஐயையோ! என்னைக் காப்பாத்துங்களேன்! என்னால நிக்க முடியலியே! என்ன காரணம்னு தெரியலே... கால்கள் ஓடிக்கிட்டே இருக்கு!'' கூக்குரலிட்டாள் மங்காத்தா. லாங் ஜம்ப் ஹை ஜம்ப் தாவிக்குதித்தல் இப்படி ஓடிக் கொண்டே ஓலமிட்டாள்!

''அட கடவுளே! என்னை அறியாமலே, நான் விரும்பாமலே மங்காத்தா மீது மாஜிக் போட்டு விட்டேன் போலிருக்கே!'' பரிதாபப்பட்டாள் மந்த்ரா.

அப்போது மங்காத்தா அங்கு உடற் பயிற்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த சட்டங்கள் பொறுத்தப்பட்ட பெரிய பிரேமில் தலைகீழாக ஏறிக் கொண்டிருந்தாள். மாணவிகள் விரை வில் ஏணியில் ஏறுவதற்கான பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பிரேம் அது. அதில் மங்காத்தா தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் தொத்தித் தொத்தி ஏறுவதைக் கண்டு அவள் அவ்வாறு ஏறுவது அவளுடைய சாகசம் என்று கருதிய எலிசபெத் டீச்சர், ''பலே, பலே! மங்காத்தா புது மாதிரியான பயிற்சி. இதற்காகவே உனக்கு பி.டி. மாலதியின் வெள்ளிக் கோப்பை கிடைத்தாலும் கிடைக்கலாம்!'' என்றார்.

பாவம் மங்காத்தாவை மந்த்ராவின் மாஜிக்குதான் இப்படிப் பாடாய் படுத்துகிறது என்பதை அறியவில்லை எலிசபெத்.

உடனே மந்த்ரா தன் தாத்தாவை நினைத்துக் கொண்டாள்.

'தாத்தா இந்த இக்கட்டிலிருந்து அந்த மங்காத்தாவை காப்பாத்துங்க... என்ன மந்திரம் போட்டு அவனை நிக்கச் செய்யறதுன்னு எனக்குத் தெரியல்லே!' என்று அவசர அழைப்பு அனுப்பினாள்.

கருப்புப் பூனை, நீல விழி பளபளக்க வாலை உயர்த்திக் கொண்டு வந்தது. மங்காத்தாவின் ஓட்டமும் நின்றது. பொத்தென்று களைத்துப் போய் தரையில் விழுந்தாள்.

மந்த்ராவின் பள்ளிக்கு இரண்டு நாள் சேர்ந்தாற் போல் விடுமுறை. விடுமுறை யானால் வகுப்புகள் கிடையாதே... தவிர மாணவிகள் எங்கும் வெளியே போக முடியாது. ஹாஸ்டலிலேயே ஓய்வாக இருக்கலாம். லைப்ரரியில் போய் படிக்கலாம். தோட்டங்களில் உலாவலாம். விளையாடலாம். தோட்டத்தில் உள்ள ஒரு அடர்ந்த மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த பெஞ்சில் கருப்புப் பூனை கண்ணாடி அணிந்தபடி செய்தித்தாளைப் படிப்பதில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தது. அது பிறர் பார்வைக்குப் பூனையாக தோன்றினாலும் உண்மையில் மந்த்ராவின் தாத்தா கேசவன் குட்டிதான். மந்த்ராவுக்கு பாடிகார்டாக வந்ததிலிருந்து பேப்பரே படிக்க வில்லை தாத்தா. அந்த ஏக்கம் போக இப்போது...

''உலகத்து நியூஸ் ஒண்ணுமே தெரிஞ்சுக்கல்லே!'' என்று மூக்குக் கண்ணாடியை மேலே உயர்த்திக் கொண்டது பூனை.

''தாத்தா, எங்களுக்கு இரண்டு நாள் லீவு போரடிக்குது. வாங்களேன் காலார இப்படி கார்டனை சுத்திட்டு வரலாம். பள்ளிக்கு சொந்தமான பெரிய தோப்பு கூட இருக்கு!'' என்று அழைத்தாள் மந்த்ரா.

''மந்த்ராகுட்டி... கொஞ்சம் இப்படி என் அருகில் பேசாம உட்காரு. நியூஸ் படிச்சு ரொம்ப நாளாச்சு!'' என்று பெஞ்சின் அருகே தன் வாலினால் தட்டி உட்காரும் படி கூறியவர், ''இதோ ஒரு நியூஸ்! பாங்க் கொள்ளையில் கைதான திருடன் சிறையி லிருந்து தப்பி விட்டானாம். பரபரப்பான செய்தி!'' என்றார்.

தாத்தாவின் அருகே உட்காரப்போன மந்த்ராவின் பார்வை தூரத்தில் வரும் இருவர் மீது பதிந்தது.

''அந்த முரட்டு மங்காத்தாவும், முகடு வடிவும் வருதுக!'' என்றாள் தாத்தாவிடம்.

''அப்போ நான் இங்கே இருந்து மறைஞ்சுட றேன். பூனை நியூஸ் பேப்பர் படிப்பது அவர் களுக்கு வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும்!'' என்றவர் பளிச்சென்று மறைந்து போனார். அவர் படித்துக் கொண்டிருந்த பேப்பர் மட்டும் பெஞ்சில் கிடந்தது.

''என் தாத்தான்னா தாத்தாதான். என்ன அழகா அந்தர்த்தியானமாயிட்டார்!'' என்று பெருமைப்பட்டுக் கொண்டாள் மந்த்ரா.

மங்காத்தாவும், வடிவும் மந்த்ராவின் அருகே வந்தனர். மந்த்ரா அவர்களை லட்சியமே செய்யாமல், தூரத்தில் ஒரு சிட்டுக் குருவி, 'க்விக் க்விக்' என்று ஓசை எழுப்பியபடி கிளைக்கு கிளை தாவுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வடிவு பெஞ்சில் கிடந்த செய்தித்தாளை எடுத்து அதன் எட்டு காலத்தில் கொட்டையாகப் போட்டிருந்த தலைப்பை படித்தாள்.

''இதைப் பாத்தியா? பாங்க் கொள்ளை திருடன் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டானாம்!'' என்றாள் பேப்பரை மங்காத்தாவிடம் காட்டிக்கொண்டே.

''அது என் மாமா... பலே கில்லாடியாக்கும்!'' பெருமையாக பேப்பரில் போட்டிருந்த போட்டோவை பார்த்துக் கொண்டே சொன்னாள் மங்காத்தா.

ஜேப்படி திருட்டு, சங்கிலி பறிப்பு, பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உ<ள்ளே புகுந்து திருடுதல் இதிலெல்லாம் அவள் உறவினர்கள் கில்லாடிகள். அவள் மாமா மன்னாரு பாங்க் கொள்ளையில் அகப்பட்டு ஜெயிலில் இருந்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது காம்பவுண்ட் சுவர் மேலிருந்து 'ப்ஸ்...ப்ஸ்!' என்று யாரோ ரகசியமாக அழைக்கும் சத்தம் கேட்டது. ஒலி வந்த திசையில் மங்காத்தா பார்த்தாள்.

''அதோ என் மாமா, மன்னாரு!'' என்று குதித்தாள்.

காம்பவுண்ட் சுவர் மீதாகத் தெரிந்த உருவம் சிறையிலிருந்து தப்பிய கைதி மன்னாருதான். மங்காத்தா குதிபோடவே, மன்னாரு சுவரில் தாவி ஏறி இவர்கள் பக்கம் குதித்தான். மாமாவை நோக்கி மங்காத்தா ஓட, வடிவும் பின் தொடர்ந்தாள்.

மந்த்ரா பிரமை பிடித்துப் போய் பேச்சற்று உட்கார்ந்திருந்தாள்.

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us