தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/க்வாக்... க்வாக்

க்வாக்... க்வாக்

க்வாக்... க்வாக்


PUBLISHED ON : ஜன 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் பொய்கை நாட்டில் குள்ள வாத்து ஒன்று இருந்தது. அது, 'க்வாக் க்வாக்' என்று குரல் கொடுத்தப் படியே இருந்தது. எல்லாரும் அதை 'க்வாக்' என்றே அழைத்தனர்.

அது இரவு பகல் பாராமல் உழைத்துப் பொருள் சேர்த்தது. வீண் செலவு செய்யாமல் சேமித்து வைத்தது. அதனிடம் ஏராளமான பணம் சேர்ந்தது.

அந்நாட்டு அரசனுக்குப் பணம் தேவைப்பட்டது. அமைச்சரிடம் அவன், ''யாரிடம் கடன் கேட்கலாம்? சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.

''அரசே! க்வாக்கிடம் ஏராளமான செல்வம் உள்ளது. அதனிடம் கடன் வாங்கலாம்,'' என்றார் அமைச்சர்.

க்வாக்கின் மாளிகைக்கு வந்த அரசன் அதனிடம் கடன் கேட்டான்.

அரசரே, தன்னிடம் வந்து கடன் கேட்பதை நினைத்துப் பெருமை கொண்டது க்வாக். அவர் கேட்ட பணத்தைத் தந்தது.

மூன்றாண்டுகள் சென்றன.

வாங்கிய கடனை அரசன் திருப்பித் தரவே இல்லை. பொறுமை இழந்த அது, அரசனிடம் சென்று கடனைத் திரும்ப வாங்க நினைத்தது.

பணத்தை எடுத்து வர பெரிய சாக்குப் பை ஒன்றை எடுத்தது. அதைத் தன் தோளில் சுமந்து கொண்டு தலைநகரத்தை நோக்கிப் புறப்பட்டது.

''க்வாக்! க்வாக்! க்வாக்!''

''கொடுத்த கடனை வாங்க அரசனிடம் செல்கிறேன். அரண்மனைக்குச் செல்கிறேன். க்வாக்! க்வாக்! க்வாக்!'' என்று மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே சென்றது.

க்வாக் பாடிக்கொண்டே செல்வதை ஏணி ஒன்று பார்த்தது. ''க்வாக்! எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டது.

''அரசர் என்னிடம் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை வாங்க அரண்மனைக்குச் செல்கிறேன்,'' என்றது க்வாக்.

''அரண்மனையைப் பார்க்க எனக்கும் ஆசையாக உள்ளது. என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா?'' என்று கேட்டது ஏணி.

''நண்பர்களுக்காக, எதையும் செய்யலாம். நீ என் சாக்குப் பைக்குள் அமர்ந்து கொள். உன்னையும் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறேன்,'' என்றது க்வாக்.

ஏணியும் அந்தச் சாக்குப் பைக்குள் சென்றது. சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது க்வாக்.

''கொடுத்த கடனை வாங்க அரசனிடம் செல்கிறேன். அரண்மனைக்குச் செல்கிறேன். க்வாக்! க்வாக்! க்வாக்!'' என்று மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே சென்றது.

வழியில் ஆறு ஒன்று அதன் பாட்டைக் கேட்டது.

''க்வாக்! எங்கே போகிறாய்?'' என்று கேட்டது.

''என்னிடம் அரசர் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை வாங்க அரண்மனைக்குச் செல்கிறேன்,'' என்றது.

''அரண்மனையைப் பார்க்க எனக்கும் ஆசையாக உள்ளது. என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா?'' என்று ஆர்வத்துடன் கேட்டது ஆறு.

''நண்பர்களுக்காக எதையும் செய்யலாம். நீயும் என் சாக்கு மூட்டைக்குள் புகுந்து கொள். உன்னையும் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறேன்,'' என்றது.

அந்த ஆறும் சாக்கு மூட்டைக்குள் சென்றது. சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது.

''க்வாக்! க்வாக்! க்வாக்! கொடுத்த கடனை வாங்க அரசனிடம் செல்கிறேன். அரண்மனக்குச் செல்கிறேன். க்வாக்! க்வாக்! க்வாக்!'' என்று மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே சென்றது வாத்து.

வழியில் இருந்த மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது. அதில் இருந்த தேனீக்கள், ''க்வாக்! பாடிக் கொண்டே எங்கே போகிறாய்?'' என்று கேட்டன.

''அரசர் என்னிடம் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை வாங்க அரண்மனைக்குச் செல்கிறேன்,'' என்றது அது.

''அரண்மனையைப் பார்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. உன்னுடன் எங்களையும் அரண்மனைக்கு அழைத்துச் செல்வாயா?'' என்று அவை கேட்டன.

''நண்பர்களுக்காக எதையும் செய்யலாம். நீங்கள் இந்தச் சாக்கு மூட்டைக்குள் செல்லுங்கள். உங்களையும் அரண்மனைக்குத் தூக்கிச் செல்கிறேன்,'' என்றது.

ரீங்காரம் இட்டபடியே அவை சாக்கு மூட்டைக்குள் சென்றன. க்வாக் சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டது.

''க்வாக்! க்வாக்! க்வாக்!'' என்று மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே அரண்மனையை அடைந்தது.

வாயில் காவலர்களிடம் அது, ''நான் அரசருக்குக் கடன் கொடுத்தேன். அந்தப் பணத்தை வாங்க வந்திருக்கிறேன். அரசரிடம் சென்று சொல்லுங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தியது.

உள்ளே இருந்த அரசனுக்கு அதன் குரல் கேட்டது. கோபத்தால் துடித்தான் அவன்.

அங்கு வந்த காவலர்கள், ''அரசே! வாயிலில் க்வாக் வந்துள்ளது. உங்களிடம் கொடுத்த கடனை வாங்க வந்திருப்பதாகச் சொல்கிறது,'' என்றனர்.

''கடனைக் கேட்டு இங்கேயே வந்துள்ளதே... அந்த வாத்திற்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அதைத் தண்ணீர் இல்லாத கிணற்றில் தூக்கிப் போடுங்கள். அங்கேயே பட்டினி கிடந்து சாகட்டும்,'' என்று கட்டளை இட்டான் அரசன்.

அதன்படியே வீரர்கள் க்வாக்கைத் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டனர்.

''ஐயோ! இவ்வளவு ஆழமான கிணற்றுக்குள் போட்டு விட்டார்களே... என்ன செய்வேன்?'' என்று புலம்பியது அது.

நண்பன் ஏணியின் நினைவு அதற்கு வந்தது.

''ஏணி நண்பனே! எனக்கு உதவி செய்!'' என்று கத்தியது.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us