PUBLISHED ON : ஜன 17, 2014

ரோமானியர்கள் கட்டடக்கலைக்கு பேர் பெற்றவர்கள். மிகவும் திட்டமிட்டு தங்கள் நகரினை நிர்மானித்தனர். அவர்கள் தம் நகரில் கோயில்கள், நகரத்து மக்கள் கூடம், பெரிய குளியல் அமைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என பல்வேறு பிரமிக்கத்தக்க பொது கட்டடங்கள் அமைக்க ஆசைப்பட்டனர். பணக்கார குடும்பங்களுக்கான மிகப் பெரிய பங்களாக்களும் இருந்தன. ஆனால், இவற்றின் அருகே ஒழுங்கற்ற சீர்குலைந்த இங்கே காண்பது போன்ற குடியிருப்புகள், அதிக நெரிசல் மிக்க நிலையில் கடைகள் மற்றும் சிறிய தொழிற் கூடங்கள் மேல் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த குடியிருப்புகளில் பாத்ரூமோ, கிச்சனோ இல்லை. ஏழைகள் வெளியே சமைத்தனர் அல்லது கடை களில் வாங்கி உண்டனர். ரோமானியர்கள் வீதி யிலேயே உண்டு, வாழ்ந்து, வியாபாரம் செய்ததால் அவர்களின் நகரம் மிகவும் இரைச்சல் மிகுந்ததாய் இருந்தது. குதிரைகள் மற்றும் எருதுகள் பூட்டிய வண்டிகள் கிராமப்புறங்களிலிருந்து பொருள்களை நகரத்திற்கு ஏற்றி வந்ததால் போக்குவரத்தும் படுமோசமாய் இருந்தது.
நாட்டுப்புற வாழ்க்கை!: வில்லா எனப்படும் பெரிய வீடுகள் நாட்டுப் புறங்களில் விஸ்தீர்னமாய் கட்டப்பட்டிருக்கும்.
சமையலறையில்: இந்த காட்சி ரோமானிய சமைய லறையின் உண்மை தோற்றத்தை தெள்ள தெளிவாக்குகிறது. இது போன்ற அமைப்பை பங்களா அல்லது பணக்கார குடும்பத்தின் வில்லாவில் காணலாம்.
இறுக்கமான, நெருக்கமான, வசதிகளற்ற இடத்தில் ஏழைகள் வாழ, வசதி படைத்தவர்கள் நிரம்பிய வசதிகள் கொண்ட நன்றாக தீர்மானித்து கட்டப்பட்ட வீடுகளில் வசித்தனர். பணக்கார வீடுகளில் குளியலறை, கழிப்பறை, மத்திய பெரிய குளியலறை, மத்திய பெரிய அறையில் உஷ்ண வசதி, சமையலறை என அனைத்தும் இருந்தன. பல வகைகளில் பார்க்கையில் இன்றைய நம் வீடுகளை விட ரோமானிய வீடுகள் வேறுபட்டிருந்தன.
