தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்திரா! (22)

மாஜிக் மந்திரா! (22)

மாஜிக் மந்திரா! (22)


PUBLISHED ON : மார் 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தான் பார்த்த சினிமாவில் வரும் ஹீரோவை போல் மந்த்ராவை திருடச்சொல்லி டார்ச்சர் செய்தாள் மங்காத்தா. இனி-



'ஆலிவர் டுவிஸ்ட்'டில் அநாதைப் பையன்களை ஜேப்படி தொழிலில் ஈடுபட பயிற்சி அளிக்கும் பாகினை மங்காத்தா வினால் மறக்க முடியவில்லை. தன்னை பாகினாகவே கனவு கண்டு கொண்டு தூங்கினாள். காலையில் எழுந்தபோது முதல் நாள் இரவு ஏற்பட்ட பயமெல்லாம் மறைந்து, துணிச்சல் கூடியிருந்தது மங்காத்தாவிடம்.

கடிலை உணவுக்குப் பிறகு எல்லாரும் கச்சிதமாக உடையணிந்து விளையாட்டு மைதானத்துக்கு வரவேண்டும் என்று தலைமையாசிரியை தனபாக்கியம் உத்தர விட்டிருந்தார். மாதம் ஒருமுறை மாணவி களை வாக் (நடை பயிற்சி) அழைத்துப் போவது வழக்கம். முக்கிய வீதிகள் வழியேயும், வயல் புறங் களிலும் இரண்டு மணி நேரம் நடந்து சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புவர். அப்போது மாணவிகள் சுதந்திரமாகச் செயல்படலாம்; வேடிக்கை பார்க்கலாம்; விளை யாட்டாகப் பேசலாம். ஒவ்வொரு மாதமும் மாணவிகள் இந்த 'வாக்' போகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.

இரண்டு மூன்று ஆசிரியைகள் உடன் வர, மாணவிகள் கூட்டம், 'வாக்' கிளம்பியது. மந்த்ராவின் அருகே வந்தாள் மங்காத்தா.

''ஏய், நேற்று இரவு ஏதோ விஷமத் தனம் செய்து என்னை பயமுறுத் திட்டே. அந்த வேலைத்தனத்தை எல்லாம் மறுபடியும் எங்கிட்டக் காட்டாதே. என் விருப்பப்படி நீ ஜேப்படி செய்யக் கத்துக்கணும். இப்போ நாம் கடை வீதி வழியாப் போகும்போதே உன் கைவரிசையைக் காட்டணும். தப்பி விடலாம் என்று கனவு காணாதே!'' என்று எச்சரிக்கை விடுத்தாள்.

'இந்த மங்கா திருந்தவே மாட்டாளா? இப்படிப்பட்ட விபரீத புத்தி யெல்லாம் இவளுக்குத் தோன்றுவானேன்? இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பலாம்?' என்று எண்ணமிட்டபடி நடந்து கொண்டிருந்தாள் மந்த்ரா. அவள் நழுவி விடாதபடி மங்காவின் தோழிகள், மந்த்ராவை சூழ்ந்து கொண்டு நடந்தனர்.

தெரு ஓரத்தில் அரச மரத்தின் கிளையில் மந்த்ராவின் தாத்தா கண்மூடி சுருண்டு படுத்திருந்தார். காலைச் சூரியனின் கதகதப்பை அனுபவித்தபடி. மந்த்ராவின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது.

'பாவம் தாத்தா! எனக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறார். இரவு சுகமான தூக்க மில்லை போலிருக்கு... குளிர் காய்கிறார்... அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது!' என்று நினைத்தபடி நடக்கலானாள்.

இப்போது அவர் கள் பெரிய கடை வீதிக்கு வந்திருந்தனர். வியாபாரக் கடைகள் சுறுசுறுப்பாயிருந்தன. கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது. மந்த்ரா வின் கையைப் பிடித்து அழுத்தினாள் மங்கா.

''ஏய், அதோ பார் அந்த ஆள் பையிலே தங்க செயினில் கோத்த கடிகாரம். அந்தக் கடை ஷோகேஸிலுள்ள பொம்மையை வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கான். நீ நைசா போய் அந்தத் தங்கச் செயின் கடிகாரத்தை லாவிக்கிட்டு வரணும் வரே. ம் கிளம்பு...'' என்று தன் முழங்கையினால் இடித்தாள் மங்காத்தா.

'அடக்கடவுளே! குட்டிச்சாத்தானைக் கூப்பிட்டு நான் ஏதாவது செய்தாகணும். இல்லேன்னா, விபரீதமாப் போயிடும்...' என்ற முடிவுக்கு வந்தாள் மந்தரா.

அந்த ஆளை பார்த்தாள். அவர் ஒரு கிராமத்து ஆள். வாட்ட சாட்டமான உடல். முறுக்கி விட்ட மீசை. முழுக்கை சட்டை அணிந்திருந்தார். அதன் தங்கப் பித்தானோடு இணைத்த தங்கச் சங்கிலி, அவரது மார்புப் பைக்குள் புகுந்திருந்தது.

'அவரிடமிருந்து அந்தச் சங்கிலியை நான் எப்படி ஜேப்படி செய்ய முடியும்? ஏன் செய்யணும்?' என்று வினா எழுப்பிக் கொண்டே வேக வேகமாகக் குட்டிச் சாத்தானைக் கூப்பிட்டாள் மந்த்ரா.

அடுத்த விநாடி...?

துணிக்கடை விளம்பர பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற அந்த கிராமத்து ஆள், யாரோ முதுகில் அறைந்தது போல திடுக்கிட்டு திரும்பினார். எதையோ கண்டு பீதி அடைந்தவர் போல, தங்கச் செயினை சட்டையோடு இறுக்கப் பற்றியபடி அங்கிருந்து வேக வேகமாக நடந்தார். இல்லை ஓடலானார்.

''ச்சே! அந்த ஆள் ஏன் அப்படி விழுந் தடிச்சுகிட்டு ஓடறான்?'' ஏமாற்றக் குரல் கொடுத்தாள் மங்காத்தா.

''இந்த மந்த்ரா மசமசன்னு நின்னுக் கிட்டிருந்ததாலே பொன்னான வாய்ப்பு கை நழுவிப் போயிட்டுது,'' என்று அலுத்துக் கொண்டாள்.

'நல்லவேளை என் குட்டிச்சாத்தான் அந்த ஆளை விரட்டி என்னைக் காப்பாத்திட்டான். என் மாஜிக் பலிச்சுட்டுத்து!' என்று நிம்மதிப் பட்டாள் மந்த்ரா. ஆனால், அது அதிக நேரம் நீடிக்கவில்லை.

கடை வீதியில் ஒரு நாகரிக பெண்மணி டீக்காக உடையணிந்து, டம்பப்பை முழங்கையில் ஊசலாட பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள். அவள் வானிடி பாக் மங்காத்தாவை கவர்ந் திழுத்தது. வடிவு இடம் கிசுகிசுத்தாள்.

'அந்த டம்பப் பையப் பாத்தியா? முதலைத் தோலினால் ஆனது. அதுவே ஏகவிலை இருக்கும். அந்தப் பைக்குள் நமக்கு நல்ல வேட்டையே கிடைக்கும். இந்த சனியன் மந்த்ராவை நம்பிப் பிரயோசனமில்லை. நானே அதைத் தேட்டை போட்டுட்டு வரேன். நீ அக்கம், பக்கம் பார்த்து எனக்குத் தகவல் கொடு' என்று கூறிவிட்டு காரியத்தில் இறங்கினாள்.

வடிவிடம் அவள் கிசுகிசுத்தது மந்த்ராவின் காதிலும் விழவே, அவள் பதறிப் போனாள்.

'உன் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போறது. உன்னால்தான் அடிக்கடி குட்டிச் சாத்தானை கூப்பிட வேண்டி யிருக்கே' என்று அலுத்துக் கொண்டாலும் மாஜிக்கின் உதவியை நாடினாள் மந்த்ரா.

அப்போது மங்காத்தா அந்த நாகரிகப் பெண்ணின் பின்னால் போய் நின்று நைசாக அவள் டம்பப் பைக்குள் தன் திருட்டு விரல்களை நுழைத்தவள் வீல் என்று அலறினாள். முதலைத் தோலினால் ஆன அந்த டம்பப் பை, நிஜ முதலையாகவே மாறியிருந்தது. அது மங்காத்தாவின் கையை தன் உளிப் பற்களால் உறுதியாகக் கடித்துக் கொண்டிருந்தது.

''ஐயையோ'' என்று தவித்தாள் மந்த்ரா.

'ஏய் குட்டிச்சாத்தான் மறுபடி குழம்ப ஆரம்பிச்சிட்டியா? நான் அந்தப் பெண்ணின் பையைக் கவனின்னுதானே சொன்னேன். நீ மங்காத்தாவின் கையை கவனிச்சுட்டியே. அவள் போடும் கூச்சலில் கூட்டம் கூடி ஏக ரகளையாகி விடுமே. ஏதாவது செய்து இந்த களேபரத்தை அமுக்கு' என்று வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுகோளை குட்டிச்சாத்தான் நிறைவேற்றவில்லை. அவள் தாத்தாதான் நிறைவேற்றினார்.

''மந்த்ராக் குட்டி என்ன 'வாக்கிங்' கிளம்பி னீங்களா? திடீரென்று என் மீசை படபடத்தது. ஏதோ விபரீதம் என்று உணர்ந்து ஓடி வந்தேன். என்ன ஆச்சு?'' என்று கேட்டார் கண்களில் குறும்பு வழிய.

மந்த்ரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

''அப்படியா, சமயத்திலே வந்து நிலைமையை சீராக்கிட்டீங்க தாத்தா. ரொம்ப நன்றி,'' என்று கருப்புப் பூனையை வாஞ்சை யோடு தடவிக்கொடுத்தாள்.

நாகரிகப் பெண்ணின் டம்பப் பை முதலை யாக இல்லை. பையாகவே இருந்தது. கடை வீதி கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால், மங்காத்தா மட்டும் வலிபொறுக்க முடியாமல் கையை உதறிக் கொண்டிருந்தாள்.

'வாக்கிங்' முடிந்து ஹாஸ்டல் திரும்பியதும் மங்காத்தாவின் கைக்கு மருந்து தடவி கட்டுப் போட்டாள் மந்த்ரா.

''என்ன ஆச்சு என் கைக்கு... இப்படி வீங்கிட்டுதே. எரிச்சலும், வலியும் தாங்க முடியலியே...'' என்று கதறினாள்.

'இவளோட ஜேப்படி புத்திக்கு இது ஒரு முடிவு கட்டும்னு நினைக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டே பாண்டேஜுக்கு முடிபோட்டாள் மந்த்ரா.

தடித்தா கேசவன் குட்டியும், பேத்தி மந்த்ராவும் பள்ளியின் நூலகத்தில் இருந்தனர். வேறு யாரும் இல்லை. கருப்புப் பூனை உருவில் இருந்த தாத்தா, மந்த்ராவின் முன்னே யுள்ள மேஜை மீது பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்திருந்தார். மந்த்ரா தன் அருகே நிறையப் புத்தகங்களைக் குவித்துக் கொண்டிருந்தாள்.

''மந்த்ராக்குட்டி, எல்லாரும் விளையாடிக் கொண்டும் வம்பளந்து கொண்டுமிருக்காங்க. நீ மட்டும் தனியா லைப்ரரியிலே என்ன செய்யறே?'' என்று கேட்டது கருப்புப் பூனை.

-மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us