sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (25)

மாஜிக் மந்த்ரா! (25)

மாஜிக் மந்த்ரா! (25)


PUBLISHED ON : ஏப் 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2014


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மங்காத்தா ஹோம் ஒர்க் செய்யாமல் மந்த்ராவின் ஹோம்ஒர்க்கை பிடுங்கிக் கொண்டாள். மந்த்ராவின் மேஜிக்கால் டீச்சரிடம் மாட்டிக் கொண்டான். இனி-

''என்ன மங்கா, என்ன விஷயம்? கையெல்லாம் ஒரே பசை. இந்த விடைத் தாள்களில் மந்த்ராவின் கையெழுத்து. அவளோட பெயர்? நீ ஹோம் ஒர்க் செய்யலியா? ம் நீ செய்ய மாட்டேன்னு தெரியும்!'' என்று கடுகடுத்த ஆசிரியர் மந்த்ராவின் ஹோம் ஒர்க் காகிதங்களை மங்காத்தாவிடமிருந்து உருவி மந்த்ராவிடம் கொடுத்துக் கொண்டே, ''போய் கைகளைக் கழுவி கொண்டு வா...'' என்று மங்காவிற்கு உத்தரவிட்டார். தொங்கிய முகத்தோடு மங்காத்தா பாத்ரூமை நோக்கிப் போனாள்.

அதன் பிறகு அன்று முழுவதும் மங்காத்தாவுக்கு 'மூட்' அவுட்டாகி விட்டது. ஏகக் கடுப்போடிருந்தாள். அந்தப் பள்ளிக்கூடமும், வாத்தியார்களும், கட்டுப் பாடுகளும் அவளுக்கு பிடிக்கவில்லை.

அன்று வகுப்பு அரைநாள் தான் என்று அறிவித்த ஆசிரியர், ''எல்லோரும் போகலாம். மங்காத்தாவைத் தவிர,'' என்று உத்தரவிட்டார்.

''மங்கா நீ வகுப்பிலேயே உட்கார்ந்து, செய்யாத உன் வீட்டுப் பாடங்களைச் செய்யவேண்டும்!'' என்று கூறிப் போய் விட்டார். மங்காத்தாவிற்கு வெறியேற இதை விட என்ன வேண்டும்? அவள் தோழிகள் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டது, மேலும், அவள் எரிச்சலில் எண்ணெயை ஊற்றியது.

''இந்தப் பள்ளியின் கொடுமைகளை இனிமேல் நம்மால் தாங்க முடியாது. நாம் இங்கிருந்து ஓடிப்போவோம். என்ன சொல்கிறீர்கள்?'' என்று தன் சகாக்களை கேட்டாள்.

அவள் குணங்கொண்ட அவள் தோஸ்துகள், ''ஓடிப் போவோம். விடுதலை.... விடுதலை..!'' என்று கோரசாக கூவினர்.

மந்த்ராவுக்கு அவர் களைப் பார்க்க பயமாக இருந்தது. அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது.

''வேண்டாம் அப்படியெல்லாம் செய்யக் கூடாது மங்காத்தா. மேலும் தொந்தரவில் மாட்டிக் கொள்வீர்கள்,'' என்று புத்தி கூறினாள்.

''இந்தச் சனியனால்தான் நமக்குத் தொல்லை. இவளைப் பிடித்துக் கட்டுங்கடீ!'' என்று தன் கோஷ்டியிடம் ஆணையிட்டாள் மங்காத்தா.

''இவள் போய் ஆசிரியர்கிட்டே வத்தி வைப்பாள். இவளை வெளியே விட்டு வைத்தால் நாம் இங்கிருந்து வெளி யேறும் திட்டம் நிறைவேறாது. இவளை அந்த கப்போர்டில் தள்ளி, கதவைச் சாத்திக் கொக்கியைப் போடுங்கள்!'' என்று கட்டளை யிட்டாள்.

மங்காத்தாவின் உத்தரவுகளை உற்சாகத்தோடு நிறைவேற்றியது அவளது படை. மந்த்ராவை பலவந்தமாக அங்கிருந்த ஒரு பெரிய பீரோவிற்குள் தள்ளி கதவை மூடி, கொக்கரித்தனர்.

பாவம் மந்த்ரா. அந்த கப்போர்டுக்குள் அடைக்கப்பட்ட போதும் கூட மங்காத்தாவை திருத்த வேண்டுமென்ற நினைத்தாள்.

எப்படியாவது வெளியேறி அவள் தவறான முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும். எப்படிச் செய்வது? இந்த கப்போர்ட்டினுள்ளும் என்னை வெளியேற்றும்படி குட்டிச் சாத்தானுக்கு ஆணையிட்டு மந்திரம் போட வேண்டியதுதான்.

பீரோவுக்குள் அவளை அடைத்து விட்டால் அவள் பள்ளியிலிருந்து ஓட முடியாது என்று மந்த்ரா மாஜிக் செய்யலானாள்.

ஆனால், குழப்பம் செய்யும் குட்டிச் சாத்தானுக்கு குஷி. மந்த்ராவின் மாஜிக்கில் ஒரு பாதியைதான் நிறைவேற்றியது, மறுபாதியை செயல்படுத்தவில்லை. எப்படி? என்ன?

தன் சகாக்களோடு வெளியே நின்று கொண்டிருந்த மங்காத்தாவை, கப்போர்டிற்குள் மந்த்ராவின் அருகே கொண்டு சேர்த்தது. ஆனால், மந்த்ராவை வெளியே கொண்டு வரவில்லை. மங்காத்தா வீறிட்டாள்.

''ஏய்... ஏய்! நானும் இந்த பீரோவுக் குள்ளே... என்னையும் ஏண்டி உள்ளே தள்ளி அடைச்சிட்டீங்க? கதவைத் திறங்கடி... ப்ளீஸ்!'' என்று கெஞ்சினாள்.

அந்த சின்ன கப்போர்டுக்குள் மந்த்ராவும் மங்காத்தாவும் திக்குமுக்காடித் திணறினர். குட்டிச்சாத்தானின் விஷமத்தைப் பார்த்து மந்த்ராவும் சங்கடப்பட்டாள்.

பீரோவுக்குள்ளிருந்து மங்காத்தாவின் அபயக் குரலைக் கேட்ட அவள் சகாக்களுக்கோ வியப்பானா வியப்பு!

''மங்காத்தா எப்படி கப்போர்டுக்குள்ளே போனா? எப்பப் போனா?'' என்று குழம்பினர்.

''என்னை விடுவிங்கடி. கதவைத் திறவுங்க!'' என்று கத்தும் மங்காவுக்கு, வடிவு வெளியி லிருந்து குரல் கொடுத்தாள்.

''அடி மங்கா... கப்போர்டு சாவி உங்கிட்ட தானே இருக்கு. மந்த்ராவை உள்ளே தள்ளிப் பூட்டினதும் சாவியை நீ வாங்கிக்கிட்டாயே... என்னால சாவி இல்லாமல் எப்படி கப்போர்டை திறக்க முடியும்?''

''ஐயையோ!'' என்று அலறினாள் மங்காத்தா.

''இந்த பீரோவை உள்ளே இருந்து திறக்க முடியாதே! இது எப்படி ஆச்சு? யாரோட வேலைத்தனம் இது...என்னை உள்ளே தள்ளி?'' திணறினாள். நெளிந்தாள் மங்காத்தா.

மந்த்ராவுக்கும் மூச்சுத் திணறியது. முரட்டு மங்காத்தாவோடு அந்த சின்ன கப்போர்டுக்குள் எத்தனை நேரம் அவதிப்பட முடியும்? மறு படியும் மாஜிக் செய்ய வேண்டியதுதான். கோபத்தோடு குட்டிச்சாத்தானைக் கூப்பிட்டாள். அது செய்த குறும்பைக் கண்டித்தாள்.

''இரண்டு பேரையும் இத்துணூண்டு இடத்தில் போட்டு அடைத்து விட்டாயே... உனக்கு புத்தி இருக்கா?'' என்று கடிந்து கொண்டாள்.

குட்டிச்சாத்தான் மந்த்ராவின் தாத்தாவிடம் தான் பயப்படும். மந்த்ராவிடம் அதற்குப் பயம் கிடையாது. தமாஷாக விளையாடும்.

அவள் கோபத்தை லட்சியம் செய்த குட்டிச் சாத்தான், மீண்டும் அவள் வேண்டுகோளில் பாதியை நிறைவேற்றி விட்டுப் போய் விட்டது.

எப்படி தெரியுமா?

கப்போர்டை பெரிதாக்கி விட்டது! சிறிய இடத்தில் இருவரும் திக்குமுக்காட வேண்டா மென்று, அதை வளரும்படிச் செய்து விட்டது. வெளியே நின்று கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த வடிவும் மற்ற மங்காத்தாவின் தோழிகளும் திடீரென்று கப்போர்டு பெரிதானதைக் கண்டு பீதி அடைந்து போயினர்.

''ய்யீ! க... கப்போர்டு திடீர்னு உப்பிப் பெரிதாயிட்டுதே... மேலும்... வ... வளர்ந்து கிட்டே போகுதே!''

''ஐயையோ, என்ன ஆச்சு! கப்போர்டு பெரிசாயிகிட்டே...'' என்று மங்காத்தாவும் உள்ளே இருந்து கத்தினாள். மூச்சுத் திணறலி லிருந்து விடுபட்டவளாக, அந்த சின்ன பீரோ ஒரு சிறிய அறையாகிக் கொண்டிருந்தது.

இப்போது மந்த்ராவினாலும் மங்காத்தா வோடு நசுங்கிக் கொண்டு அவஸ்தைப்படாமல் தாராளமாக வளைய வர முடிந்தது. ஆனால், குட்டிச் சாத்தானின் விஷமத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று கருவிக் கொண்டு அதை வரவழைக்க மறுபடி மந்திரங் களைக் கூறலானாள்.

குட்டி போட்ட பூனை போல மங்காத்தா, இங்கும் அங்கும் உலாவினாள் அந்தப் பெரீய்ய கப்போர்டினுள்.

''நான் வேகமாக ஓடி இந்த பீரோவின் கதவின் மீது மோதி அதை உடைத்துக் கொண்டு வெளியேறப் போறேன்!'' என்று கூறியபடி அதில் மோதி தாக்க ஆயத்தமாகி ஓடி வந்த அதே வேளையில், மந்த்ராவின் மாஜிக்கும் பலிக்க, கப்போர்டின் கதவு படீரென்று, மாஜிக் கினால் திறந்து கொள்ள, வேகமாக ஓடி வந்து மோதிய மங்காத்தா தொபுக்கடீரென்று வெளியே வந்து விழுந்தாள். அவள் கண் முன்னே மத்தாப்புகளும், பட்டாம்பூச்சிகளும் பளிச்சிட்டு பறந்தன.

திடீரென்று கப்போர்டு உடைந்து சிதறி அதனுள்ளிருந்து வந்து விழுந்த மங்காத்தாவை அவள் சகாக்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

''என்ன ஆச்சுடீ மங்கா?'' என்று துக்கம் விசாரித்தாள் வடிவு.

''என்ன எழவோ தெரியல்லே... அந்த மந்த்ரா கழுதைதான் ஏதோ வேலைத்தனம் செய்திருக்கணும்!'' என்று தன் தலைச் சுற்றலை சமாளித்துக் கொண்டு, தட்டுத் தடுமாறியபடி எழுந்திருக்க முயன்றாள் மங்கா. இடுப்பில் ஏக வலி, பாவம் அப்போது...

''மந்த்ராக் குட்டி! உன்னை சாப்பாட்டு அறையில் தேடினேன். காணல்லே. மதியம் சாப்பாட்டுக்கு வரவில்லையா நீ? ஏதாவது கோளாறா?'' என்று கேட்டபடி கருப்புப் பூனை மந்த்ராவை நோக்கி வந்தது.

''ஓ... தாத்தா நல்லவேளையில் வந்தீங்க... இந்தக் குட்டிச் சாத்தானோட குழப்படியை ஒழுங்கு செய்து, நிலைமையைச் சரி செய்யுங்க முதல்லே. பிறகு எல்லாம் விவரமாச் சொல்றேன்!'' என்றாள் மந்த்ரா தன் தாத்தாவிடம்.

''ஏய்... இவ... இந்த மந்த்ரா, பூனையோட பேசறதைப் பாத்தியா?'' என்று கலவரப்பட்ட மங்காத்தா, ''இனி இங்கே ஒரு விநாடி கூட இருக்கக் கூடாது!'' என்று ஓட ஆரம்பித்தாள்.

ஆனால், அவள் கால்கள் மாற்றி, மாற்றி இயங்கியதே தவிர, ஒரு அங்குலம் கூட நகரமுடியவில்லை மங்காத்தாவினால். ஓடுவதாக நினைத்துக் கொண்டு கைகளை யும், கால்களையும் அசைத்தப்படி ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக் கொண்டிருந்தாள்.

மந்த்ராவும், கருப்புப் பூனையும் அந்த காட்சியைப் பார்த்து, சிரியோ சரி என்று சிரித்தனர்.

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us