தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (14) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (14) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (14) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : டிச 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: முகுந்தனிடம் இருக்கும் சக்தியின் ரகசியத்தை அறிய முயன்றான் லாரி ராஜமாணிக்கம். இனி-

சாமியார் உருவில் வந்திருந்த லாரி ராஜமாணிக்கம் முகுந்தனின் வீட்டைக் கண்டுப்பிடித்து விட்டான். இரவு நேரத்தில் முகுந்தனைப் பற்றி விசாரித்தால், தன்னைப் பற்றி யாரேனும் தவறாக நினைக்கக்கூடும் என்று எண்ணினான். இதே சாமியார் உருவத்தில் பகல் நேரத்தில் வந்து முகுந்தனைப் பற்றி விசாரித்து, அவனுக்குள் இருக்கும் சக்தி என்ன என்பதை அறிந்து கொள்ளலாம் என, நினைத்து அங்கிருந்து சென்றான்.

மறுநாள் காலை முகுந்தன் பள்ளிக்கூடம் சென்றான். மணிகண்டனும், கணேசனும் வழக்கம் போல் பள்ளிக் கூடம் வந்திருந்தனர். கிளாசுக்கு வந்த ஆசிரியர் முத்துக்குமார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

''என்னுடைய ஸ்டுடண்ட்ஸ் காணாமல் போனதோடு மட்டுமல்லாமல், பல அடிமை சிறுவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக இந்தப் பள்ளிக் கூடம் உங்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறது என்று கூறினார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், மற்றுமுள்ள வகுப்பு ஆசிரியர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். முகுந்தனின் சக்தியைப் பற்றி மணிகண்டனும், கணேசனும் மாறி, மாறிச் சொன்னார். இதுபோன்ற பெரிய சக்தி முகுந்தனுக்கு எப்படி ஏற்பட்டது? யானை பலம் வந்தது எப்படி? என்றெல்லாம் ஆசிரியர் கேட்டார்.

பலர் துருவித் துருவிக் கேட்டும் முகுந்தன் மாயமோதிரத்தின் ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் காத்து வந்தான். முன்பெல்லாம் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் முகுந்தனை நண்பர்களாக சேர்த்துக் கொள்ள மாட்டனர். அதேபோல் சாதாரண வாட்ச் மேன் மகன் தானே என்று ஏளனமாகப் பேசுவர். இதனால் முகுந்தனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால், இப்போது முகுந்தனை அனைவரும் பாராட்டுவதோடு மட்டும் அல்லாமல் நட்பும் வைத்துக் கொண்டனர்.

அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். புத்தகப் பையை வீட்டில் வைத்து விட்டு, காம்புவுண்டுக்குள் பையன்களுடன் விளையாடலாம் என, நினைத்துச் சென்றான்.

ஏற்கனவே, முகுந்தனை விளையாட்டுக்குச் சேர்க்காத பணக்கார வீட்டுப் பையன்களின் தலைவன் சுசீந்திரன் மற்றும் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சுசீந்திரன் அந்த பெரிய பிளாட் வீடுகளில் பெரிய பணக்கார வீட்டுப் பையன் அதனால் அவன் கேட்டதையெல்லாம் அவனது பெற்றோர் அவனுக்கு வாங்கிக் கொடுத்தனர்.

தான் வசதியானவன் என்கிற காரணத்தால் அந்த காம்பவுண்டுப் பிள்ளைகள் மத்தியில் தன்னை மட்டுமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்வான் சுசீந்திரன். மற்ற பிள்ளைகள் அவன் பின்னால்தான் வர வேண்டும். அவனை உயர்வாகப் பேச வேண்டும், அப்படிப் பேசினால் சுசீந்திரன் மகிழ்ச்சி அடைவான். அதில் ஒருவித மயக்கமும் அவனுக்கு உண்டு.

தற்போது பேச்சுக்கள் முழுவதும் முகுந்தனைப் பற்றி பேசுவதால், முகுந்தனுக்கு ஏதேனும் விபரீ தத்தை உண்டு பண்ண நினைத்தான். ப்பூ இவ்வளவு தானா இந்தப் பையன், என்று மற்றவர்கள் பேச வேண்டும். வாட்ச்மேன் பையன் வாட்ச்மேனாக மட்டுமே இருக்க வேண்டும் இப்படி யெல்லாம் முகுந்தனைப் பற்றி நினைத்துக் கொண்டி ருந்தான் சுசீந்திரன்.

முகுந்தன் விளையாட வந்ததும், அவனை விளையாட்டிற்குச் சேர்த்துக் கொண்டான் சுசீந்திரன்.

''முகுந்தா... அன்னிக்கு சிக்ஸர் அடிச்ச மாதிரி இன்னிக்கும் அடிப்பியா?'' சுசீந்திரன் கேட்டான்.

''அதெப்படி முடியும்? ஒவ்வொரு முறையும் சிக்ஸர் அடிக்க முடியுமா?''

''ஏன் முடியாது... நீதான் பெரிய பலசாலியாமே! அடியேன் பார்க்கலாம்,'' என்றான்.

''வேண்டாம் சுசீந்திரா... அன்னிக்கு எனக்கு விளையாடவே தெரியாதுன்னு நீ சொன்னதால நான் சிக்ஸர் அடிச்சுக்காட்டினேன். அவ்வளவுதான். சாதாரணமா நாம விளையாடலாம், வெற்றி தோல்வி நம்ம யாருக்கு வந்தாலும் பரவாயில்லை!''

''அப்படியெல்லாம் இல்லை! நீ ஒரு சிக்ஸர் அடிச்சா எங்க வீட்டுக் கார்ல உன்னை அழைச்சிட்டுப் போயி, உனக்கு, ஐஸ்க்ரீம், பீஸா, கேக் இதெல்லாம் வாங்கித் தர்றேன்,'' என்றான்.

''வேண்டாம்... நான் போட்டிக்கு வரலை.''

''அப்படின்னா நீ கோழை, எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு ஒத்துக்க அப்படி ஏத்துக்கிட்டு, என்னோட ஷூவுக்கு பாலீஸ் போடு. நான் அடிக்கிற பந்துகளை நீ எடுத்து வந்து எங்ககிட்டக் குடுக்கணும்.

''சுசீந்திரா... என்னால அந்த மாதிரியான வேலைகளைச் செய்ய முடியாது. உனக்கு இஷ்டம் இருந்தா என்னை விளையாட்டுக்குச் சேர்த்துக்க! இல்லைன்னா வேண்டாம்,'' என்று முகுந்தன் பின் வாங்கினான்.

''ஷூவை துடைச்சு பாலிஷ்போடு,'' என்று அவன் முன் வந்து நின்றான்.

முகுந்தனுக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது.

''சரி, பேட்டைக் கொடு; சிக்ஸர் அடிக்கறேன். சிக்ஸர் அடிச்சா, நீ சொன்ன ட்ரீட்டை எனக்குக் கொடுக்கணும்,'' சரியா என்றான்.

''சரி, நான் சொன்னா சொன்னதுதான்.''

முகுந்தன் சுசீந்திரனிடமிருந்து பேட்டை வாங்கிக் கொண்டான்.

சுசீந்திரன் நண்பர்கள் முதலில் தடுத்தனர்.

''பாவம் முகுந்தன்... விட்டுவிடு! நம்மோடு விளையாட ஆசைப்பட்டு வந்திருக்கான். அவனை எதுக்காக தொந்தரவு செய்யணும்?'' என்றான் ஒருவன்.

''டேய்... என்ன பேசறே நீ... கேவலம் ஆப்ட்ரால் ஒரு வாட்ச்மேன் மகன் இவன். நாம குடுக்கற கூலிப் பணத்துல சாப்பிடறவன்.சாதாரண அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துல படிக்கறவன். நாம அப்படியா? நம் லெவல் என்ன? லெவல் தெரியாம இவன் நம்ம கிட்ட வர்றதும், விளையாடறதும் இன்னியோட நிறுத்திக்கணும்! புரியுதா?''

பணக்கார வீட்டுப் பையன்களும், அதுவும் சரிதான் என்றான்.

சுசீந்திரன் பந்தைப் போட ஆயத்தமானான். முகுந்தன் பந்தை அடிக்கச் தயாரானான்.

நண்பர்கள் என்ன நடக்கப் போகுதோ... என்று வியப்போடு பார்த்து நின்றனர்.

சுசீந்திரன் வேகமாக ஓடிவந்து வேகப் பந்துவீச்சை வீசினான். முகுந்தன் மாய மோதிரத்தை வேண்டிக் கொண்டு அடித்தான்.

அடித்த பந்து விண்ணை நோக்கிப் பறந்தது. அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்து நின்றனர். சுசீந்திரன் ஒரு கணம் திகைத்து நின்றான். ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாமல் வேடிக்கை பார்த்தபடி சாமியார் உடையில் நின்றிருந்தான் லாரி ராஜமாணிக்கம்.

முகுந்தன் பந்தைஅடித்த விதம் சாதாரண விதம் அல்ல! பெரியவர்கள் கூட இவ்வளவு சக்தியை செலுத்தி அடிக்க முடியாது! உண்மையில் முகுந்தனின் ஒரு விசித்திரமான பையன்தான். இவனிடம் என்ன இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? வியப்போடு பார்த்தான்.

அதே நேரம் சுசீந்திரன் யோசனையோடு நின்றான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே எப்படி? சிறிது நேரம் யோசித்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு மாட்டிவிட்டு அவமானப் படுத்திவிடலாம் என, தன் மூளையை குறுக்கு வழியில் திருப்பினான்.

''சரி... நான் ட்ரீட் கொடுக்கறதாச் சொன்னேனே! என்னோட எல்லாரும் வாங்க!''

சுசீந்திரன் வீட்டு கார் டிரைவர் காரின் அருகில் நின்றிருந்தான்.

''டிரைவர்... வண்டியை எடு. நாங்க ஸ்னேக்ஸ் சாப்பிட போகணும்.'' என்றான்.

''உன் அப்பாகிட்டக் கேக்கணுமே,'' என்றான் டிரைவர்.

''கேட்டுக்க!''

மொபைல்போன் மூலம் சுசீந்தரின் அப்பாவுக்கு போன் செய்து பேசினான். அழைத்துப் போ... என்று அவன் அப்பாவும் சொன்னார்.

அனைவரும் காரில் ஏறினார்கள். முகுந்தனும் ஏறிக்கொண்டான். கார் அந்தக் காம்பவுண்டை விட்டுச் சென்றது. அந்தக் காரின் பின்னால் லாரி ராஜமாணிக்கத்தின் காரும் சென்றது.

அது ஒரு பெரிய பைவ் ஸ்டார் ஓட்டல். கார் ஓட்டலின் கார் பார்க்கிங்கில் நின்றது. ஏற்கனவே பல தடவை இந்த ஓட்டலுக்கு நண்பர்களை அழைத்துச் சென்றிருக்கிறான். அதனால், சாதாரணமாய் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான்.

பைவ் ஸ்டார் ஓட்டலுக்குள் செல்வது முகுந்தனுக்கு இதுதான் முதல் தடவை. உள்ளே நுழைந்ததும் டிம் லைட்டில் குளுகுளுவென்று 'ஏசி' காற்று இதமாக இருந்தது. ஒரு ஆங்கிலப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைக்காரர்களின் நடமாட்டம் இருந்தது. அங்கு இருக்கும் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர். முகுந்தன் ஒரு புது உலகத்தைக் கண்டது போல வியப்போடு பார்த்தான்.

அங்கிருந்து ஒரு ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.

இப்படிக்கூட ஒரு ஓட்டல் இருக்குமா? என்று நினைக்கத் தோன்றியது! ஆனால் சுசீந்திரனும் அவனது நண்பர்களும் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டனர். முகந்தன் ஆச்சரியப்படுவதை அடிக்கடிப் பார்த்தான் சுசீந்திரன்.

ஆறுபேர்கள் உட்காரும் டேபிளுடன் உள்ள இருக்கையில் அமர்ந்தனர். அந்த டேபிள்மீது மட்டுமே தெரியும்படி ஒரு மின் விளக்கின் வெளிச்சம்.

சுசீந்திரன் முகுந்தனிடம், '' இந்த இடம் எப்படி இருக்குது?'' கேட்டான்.

''ரொம்ப நல்ல இருக்குது?''

''இதுக்கு முன்னால் வந்திருக்கியா?''

''இல்ல... இதான் முதல் தடவை.''

''இங்க என்னை மாதிரிப் பணக்காரர்கள் தான் வரமுடியும். உன்னை மாதிரி ஏழை எல்லாம் வரமுடியாது.''

''உண்மைதான்...''

மெனுகார்டை எடுத்தான் சுசீந்திரன்.

''இந்தா... மெனுகார்டு... உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்க.''

மெனுகார்டை வாங்கிப் பார்த்தான் முகுந்தன்.

அதில் எழுதப்பட்டிருந்த எதுவுமே அவனுக்கு புரியவில்லை. அது போன்ற பெயர்களில் உள்ள தின்பண்டங்கள் எப்படி இருக்கும் என்று முகுந்தன் பார்த்ததும் கூட இல்லை.

''சுசீந்திரா... இதுல இருக்கற எதுவும் எனக்குப் புரியலை! அதனால் உன் இஷ்டப்படி வாங்கிக் கொடு.''

சுசீந்திரன் சிரித்தான்.

மெனுகார்டை கூடப் படிக்கத் தெரியாத நீ என்ன படிச்சுக் கிழிக்கப் போறே!''

பேரர் வந்தார்.

''என்ன வேணும்?''

சுசீந்திரன் வரிசையாய் சொன்னான். அதையும் ஆங்கிலத்தில் சொன்னான். முகுந்தனைக் காட்டி இவன்தான் எங்களுக்கு ட்ரீட் கொடுக்க அழைச்சுக்கிட்டு வந்தான் என, அறிமுகம் செய்து வைத்தான் சுசீந்திரன்.

பேரர் முகுந்தனைப் பார்த்து, ஹலோ சொன்னார்.

முகுந்தன் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

அரைமணி நேரம் ஆனது. ஆர்டர் செய்த பண்டங்கள் அனைத்தும் வந்து டேபிளில் நிறைந்தன. தட்டுகளில் சுவைகள் இந்த அழகே தனி. அதை எப்படி எடுத்துச் சாப்பிடுவது என்று கூட முகுந்தனுக்குத் தெரியவில்லை. சுசீந்திரன் மற்றும் உள்ள நண்பர்கள் கத்தி போன்ற உள்ள ஸ்பூன் ஒன்றையும் சூலம் போன்ற இருந்த ஸ்பூன் ஒன்றையும் எடுத்துக் குத்தியும், அறுத்தும், துண்டுகளாக்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தனர். இதெல்லாம் முகுந்தனுக்குப் பழக்கமில்லை. கையால் எடுத்துச் சாப்பிட்டான். சுவை புதியதாக இருந்தது. நன்றாக எடுத்துச் சாப்பிட்டான். பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த சுசீந்திரன் கூட்டம் மெதுவாக எழுந்து நகர்ந்தனர். இறுதியாக முகுந்தன் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

பேரர் பில்கொண்டு வந்து கொடுத்தார். கை கழுவச் சென்ற நண்பர்கள் வருவார் என, எதிர்பார்த்த முகுந்தனுக்குப் பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது. வெகு நேரம் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. பேரர் ஆங்கிலத்தில் ஏதோ திட்டிக் கொண்டிருந்தார்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us