PUBLISHED ON : நவ 13, 2021

அ நிறம் | அளவு
மண்ணுக்குள் மறைந்திருக்கும் வெடி பொருட்களைக் கண்டுபிடிப்பது, மகாவாவின் பிரதான வேலை. மகாவா என்பது ஒரு எலி!
மிதித்தாலே வெடிக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதற்காக வீரதீர செயலுக்கான தங்கமெடலும் பெற்றுள்ளது.
மண்ணுக்குள் புதைந்திருக்கும் கண்ணி வெடிகளை, மோப்ப சக்தியால் கண்டறியும். இதற்காக, முறையாக பயிற்சி பெற்றுள்ளது. அதை, 'ஹீரோ ராட்' என்ற நிறுவனம் பராமரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் இயங்கும், பி.டி.எஸ்.ஏ., என்ற அமைப்பு, விலங்குகளின் வீரதீரத்தை கண்டறிந்து அங்கீகரிக்கும் பணியை செய்கிறது. இந்த அமைப்பு, மகாவாவுக்கு தங்கமெடல் அளித்து கவுரவித்துள்ளது.
