தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மகோகனி!

மகோகனி!

மகோகனி!


PUBLISHED ON : மார் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கிலேயரால் கப்பல் கட்ட பயன்படுத்தப்பட்ட மரம் மகோகனி. வீட்டு உபயோகப் பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. இந்த மரத்துக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது.

வட, தென் அமெரிக்க நாடுகளில் வியாபார நோக்கில் பெருமளவு பயிரிடப்படுகிறது. இதில், மூன்று ரகங்கள் உண்டு. வட அமெரிக்க நாடான மேற்கு இந்தியத் தீவு பகுதியில் வளரும் மகோகனி மிக வலுவானது. இதில் தான், இசைக்கருவிகள் செய்கின்றனர்.

ஆசிய நாடுகளான இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பங்களாதேஷ், பிலிப்பைன்சிலும் தற்போது வியாபார நோக்கில் பயிரிடப்படுகிறது; சூறாவளி காற்றை தாக்குப் பிடித்து வளரும் திறன் பெற்றது.

கரீபியன் நாடான டொமினிகன் குடியரசின் தேசிய மரம் மகோகனி. இதன் பழத்தை தொடர்ந்து உண்டால், உடலில் கொழுப்பு குறையும்; இதயம் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கொடுங்காற்றில் பயிர்கள் பாதிப்பை தடுக்க, விவசாய நிலத்தின் ஓரத்தில் இதை நடலாம். பெருங்காற்றையும் கட்டுப்படுத்தும்.

சாதாரணமாக, 50 அடி உயரம் வளரும்; தேக்கு போல மரத்தில் வைரம் பாய்ந்திருக்கும். வீட்டின் நிலைக்கதவு மற்றும் ஜன்னலுக்கு பயன்படுத்தலாம்.

- செல்வ கணபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us