PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
உளுந்து - 4 மேஜைக்கரண்டி
மாங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் துருவல் - 0.5 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு, தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, பெருங்காயதுாள் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும், உளுந்தை வறுக்கவும். அதில், பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல், மாங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின், ஆற விட்டு, தண்ணீர் தெளித்து அரைக்கவும். அதில், கடுகு, பெருங்காய துாள் தாளித்து சேர்க்கவும். சுவை மிக்க, 'மாங்காய் துவையல்!' தயார்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
- ஆர்.ருக்மணி, சிதம்பரம்.
