PUBLISHED ON : ஏப் 02, 2022

புளி, தினசரி உணவில் இடம் பெறும் முக்கிய பொருள். புளியின் தளிர் இலை மருத்துவ குணம் நிறைந்தது. இதில் உணவு தயாரிக்கலாம். புளியந்தளிருடன், பருப்பு சேர்த்து கூட்டு, துவையல் செய்து சாப்பிடலாம்.
புளியந்தளிருக்கும், முதிர்ந்த புளி இலைக்கும் சில குணங்கள் உண்டு. அவற்றை பார்ப்போம்...
* உடலில் ஏற்படும் புண்ணை ஆற்றும். எத்தகைய புண்ணையும் குணப்படுத்தும் வல்லமையுண்டு
* குளிர் உடல்வாகு உள்ளவர்களுக்கு நோய்கள் தொல்லை தரும்; அவர்கள், புளியந்தளிரை அடிக்கடி சாப்பிட்டு வர, உடலில் உஷ்ணம் உண்டாகும்; நோய்கள் மறையும்
* கண் சம்பந்தமாக வரும் நோய்களை குணமாக்கும்
* காம்பு நீக்கிய புளி இலைகளை வேப்ப எண்ணெயில் வதக்கி, உடலில் வீக்கமுள்ள பகுதியில் கட்டினால் குணமாகும்
* எவ்வகை மருந்து போட்டாலும் சிலவகை புண் ஆறாது; அடுத்தடுத்து தொல்லை தரும். புளி இலைகளை கஷாயமாக்கி அந்நீரால் சுத்தம் செய்த பின், மருந்து போட விரைவில் ஆறும்; மீண்டும் தொல்லை தராது
* நரம்புகளில் ஏற்படும் அழற்சி காரணமாக உடல் வலி ஏற்படும்; அதற்கு புளி இலைகளை நீரில் அவித்து, ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
