தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (139)

இளஸ் மனஸ்! (139)

இளஸ் மனஸ்! (139)


PUBLISHED ON : ஏப் 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்டி...

என் வயது, 15; 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி. என் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே, 12 கி.மீ., துாரம் உள்ளது. தினமும், வேனில் சென்று வருகிறேன்.

புத்தக மூட்டையை துாக்கி பயணித்து, தினமும், எட்டு மணி நேரம் வகுப்பில் அமர்ந்து, வீடு திரும்புவது, மலையேறுவது போல், மிகவும் கடினமான செயல்.

வியர்த்து, விறுவிறுத்து, எண்ணெய் வழியும் முகத்துடன் திரும்புவேன். என்னை பார்க்கவே சகிக்காது. நான், 'பிரஷ்'ஷாக காட்சியளிக்க, உபயோகரமான யோசனை கூறுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத சிறுமி.


அன்பு மகளுக்கு...

பள்ளி செல்லும் நீ, மினி முகப்பூச்சு பவுடர், டியோடரன்ட், 10 கிராம், பற்பசை எல்லாவற்றுக்கும் மேல், கைகுட்டை எடுத்து செல்.

சிலர், 'எண்ணெய் வழியும் முகத்தை துடைக்க, கைகுட்டையை விட, டிஷ்யூ பேப்பர் நல்லது...' என கூறுவர்.

முகத்தை துடைக்க, டிஷ்யூ பேப்பர் விலை மிகவும் அதிகம். கைகுட்டை வைத்துக் கொள்ளலாம்.

கைகுட்டை வைத்துக் கொள்வது, 16ம் நுாற்றாண்டில் ஆரம்பித்த பழக்கம்!

பெண்கள், வெள்ளை நிறத்திலோ, பூ போட்ட பிங்க் நிறத்திலோ வைத்து கொள்ளலாம். மேலும், 10 அல்லது 12 எண்ணிக்கையில் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். பொதுவாக, கைகுட்டை, சதுர வடிவத்தில், பருத்தித் துணியில் கிடைக்கும். அதை, கை பையில் எளிதாக பாதுகாக்கலாம்.

தும்மலை அடக்க, ஒழுகும் மூக்கை துடைக்க, அடக்கி இரும பயன்படுத்தலாம்.

கைகுட்டையை உபயோகப்படுத்திய அன்று மாலையே, 20 டிகிரி சுடுநீரில், ஒரு தேக்கரண்டி டெட்டால், ஐந்து கிராம் சோப்பு பவுடர் கலந்து, துவைத்து காய போட வேண்டும்.

எப்போதும் கையிருப்பில் சில கைகுட்டைகள் வைத்துக் கொள்வது நலம். விரும்பினால் யாருக்காவது பரிசளிக்கலாம்.

கைகுட்டையில் சிலர், வாசனை திரவியம் தெளித்து வைத்திருப்பர்.

மருத்துவ படிப்பு நுழைவுக்கான, 'நீட்' தேர்வில் கைகுட்டை அனுமதிக்க மாட்டார்கள்.

கைகுட்டையை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்...

* பாதுகாப்பாய் தும்மலாம்

* வியர்வை ஒற்றி அகற்றலாம்

* தின்பண்டங்களை பொட்டலம் கட்டலாம்

* முகத்துக்கு நேரே பறக்கும் ஈ, கொசுக்களை விரட்டலாம்

* குடிநீரை வடிகட்டலாம்

* முகக்கவசமாக கட்டி கொள்ளலாம்

* கண்ணாடியைத் துடைக்கலாம்

* சூரிய ஒளியிலிருந்து முகத்தை மறைத்து பாதுகாக்கலாம்

* தலையில், கழுத்தில், 'ஸ்கார்ப்' போல் கட்டலாம்

* காயம் ஏற்பட்டால் கட்டு போடலாம்

* காயம் பட்டால் ஐஸ் பொட்டலம் கட்டி, ஒத்தடம் தரலாம்

* மேக்கப்பை துடைத்து அகற்றலாம்

* அவசரத்துக்கு போன் எண்ணை குறித்து வைக்கலாம்.

மகளே... என் கைகுட்டையை ஆட்டி உனக்கு, 'ஹாய்' சொல்கிறேன்... பதிலுக்கு நீயும் உன் கைகுட்டையை ஆட்டி, 'ஹாய்' சொல்லு!

முகத்தை துடைத்து, முழு நிலவாக்கும் கைகுட்டை வாழ்க!

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us