PUBLISHED ON : ஜூலை 08, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
நன்கு பழுக்காத மாங்காய் - 1
துருவிய தேங்காய் - 1 மூடி
தயிர் - 2 கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் எண்ணெய், கடுகு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல், உப்பு கலந்து நன்றாக அரைக்கவும். இந்த கலவையை துண்டுகளாக்கிய மாங்காயுடன் சேர்த்து தயிர் விட்டு கிளறவும்.
பின், தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து அதில் ஊற்றவும். சுவை மிக்க, 'மாங்காய் பெருக்கு' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம்.
- ஆர்.கலா, சென்னை.
