PUBLISHED ON : ஜூன் 06, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
மரவள்ளி கிழங்கு - 50 கிராம்
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - 5
துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, துண்டாக்கிய மரவள்ளி கிழங்கு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன், பொடித்த வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மாவாக்கவும்.
இதை, ஐந்து மணி நேரத்திற்குப் பின், நெய் தடவிய குழிப்பணியாரச் சட்டியில் வேக வைக்கவும். வித்தியாசமான சுவையில், 'மரவள்ளி குழிப்பணியாரம்' தயார். சுடச்சுட பரிமாறலாம். சிறுவர்,சிறுமியர் விரும்பி உண்பர்.
- ரா.உமாராணி, சிவகங்கை.
