PUBLISHED ON : மார் 19, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
மோர் - 4 கப்
பச்சை மிளகாய் - 1
வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு
கடுகு, பெருங்காயப்பொடி, நல்லெண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைத்து மோரில் சேர்க்கவும். கடாயில், 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயப் பொடி தாளித்து, மோருடன் சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து, துருவிய வெள்ளரிக்காயை துாவவும். சுவைமிக்க, 'மசாலா மோர்!' தயார்.
கோடை வெயிலுக்கு இதம் தரும். அனைத்து வயதினரும் குடிக்கலாம்.
- மரகதம், சென்னை.
தொடர்புக்கு: 83741 11933
